spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் ஆப்சென்ட் - பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்

பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் ஆப்சென்ட் – பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்

-

- Advertisement -

பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் ஆப்சென்ட் – பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்

பிளஸ் 2 தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்காதது குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கையில் இதெல்லாம் பழசு.. அதிமுக திட்டங்களின்  தொடர்ச்சியை அறிவித்த திமுக

பிளஸ் 2 தேர்வுக்கு மாணவர்கள் எழுத வராதது குறித்து விளக்கம் அளித்த சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “இவ்வளவு மாணவர்கள் ஏன் பொதுத்தேர்வு எழுத வரவில்லை என முதலமைச்சர் தொலைபேசி மூலம் கேட்டார். கொரோனாவுக்கு முன் இருந்த பள்ளிக் கல்வித்துறை இப்போது எவ்வாறு செயல்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். கொரோனாவுக்கு பிறகு பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வது மட்டும் எனது வேலை இல்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற நிலை வரக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

we-r-hiring

பிளஸ் 2 தேர்வு எழுதாத 47,943 பேரில் 40,593 பேர் கடந்த ஆண்டு 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்கள். இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து தொடர்ந்து பள்ளிக்கு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்வு எழுதாத மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து, துணைத் தேர்வு எழுத நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆட்சியர்களின் ஒத்துழைப்பு, பிற துறைகளின் பங்களிப்புடன் மாணவர்களை துணைத்தேர்வு எழுத வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்வு எழுதாத மாணவர்களுக்கு துணைத்தேர்வின் அவசியம் குறித்து விளக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்” எனக் கூறினார்.

MUST READ