spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசூர்யாவுடன் இன்னொரு படம் பண்ண போறேன்.... ஆனா.... கார்த்திக் சுப்பராஜ் கொடுத்த அப்டேட்!

சூர்யாவுடன் இன்னொரு படம் பண்ண போறேன்…. ஆனா…. கார்த்திக் சுப்பராஜ் கொடுத்த அப்டேட்!

-

- Advertisement -

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் மீண்டும் சூர்யாவுடன் இணைந்து இன்னொரு படம் பண்ண போவதாக கூறியுள்ளார்.சூர்யாவுடன் இன்னொரு படம் பண்ண போகிறேன்.... ஆனால்.... கார்த்திக் சுப்பராஜ் கொடுத்த அப்டேட்!

தமிழ் சினிமாவில் பீட்சா படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து வித்யாசமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் கார்த்திக் சுப்பராஜ். இவரது இயக்கத்தில் கடந்த (மே 1) அன்று ரெட்ரோ திரைப்படம் வெளியானது. சூர்யாவின் 44வது படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் இந்த படத்தில் இடம்பெற்ற கனிமா பாடல் ரசிகர்களை வெகுவாக கவரந்துள்ளது. இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், மீண்டும் சூர்யாவை வைத்து புதிய படம் இயக்கப் போவதை உறுதி செய்துள்ளார். சூர்யாவுடன் இன்னொரு படம் பண்ண போறேன்.... ஆனா.... கார்த்திக் சுப்பராஜ் கொடுத்த அப்டேட்!அதன்படி அவர், “நான் கண்டிப்பாக மீண்டும் சூர்யாவை வைத்து இன்னொரு படம் பண்ண போகிறேன். ஆனால் இந்த படம் மிகப்பெரியது. எனவே அதற்கு சூர்யாவிடம் இருந்து நிறைய நேரம் தேவைப்படும். சூர்யாவிற்கு தற்போது நிறைய கமிட்மெண்ட்கள் இருப்பதால் இந்த படத்தை எப்போது தொடங்குவோம் என்று எனக்கு தெரியவில்லை. இந்த படம் என்னுடைய மற்ற அனைத்து படங்களையும் போல் புதிய அம்சங்களை கொண்டிருக்கும். இதை என்னுடைய கனவு ஸ்கிரிப்ட்” என்று தெரிவித்துள்ளார்.

we-r-hiring

கார்த்திக் சுப்பராஜ் கொடுத்துள்ள இந்த தகவல் இந்த படம் எந்த மாதிரியான படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது.

MUST READ