spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஜெயிலர் 2' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

ஜெயிலர் 2′ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

-

- Advertisement -

ஜெயிலர் 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.ஜெயிலர் 2' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நெல்சன். இவரது இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழக்கம்போல் மாஸ் காட்சிகளில் மிரட்டி இருந்தார். மேலும் படத்தில் வில்லனாக நடித்திருந்த விநாயகனின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நெல்சன், ரஜினி கூட்டணியில் ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், யோகி பாபு ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகின்றனர். இது தவிர மோகன்லால் – சிவராஜ்குமார் முதல் பாகத்தைப் போல் இரண்டாம் பாகத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளனர்.ஜெயிலர் 2' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் என்ன? அதுமட்டுமில்லாமல் நந்தமுரி பாலகிருஷ்ணாவும் பவர் ஃபுல்லான கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் பகத் ஃபாசில், செம்பன் வினோத் ஆகியோரும் இந்த படத்தில் நடிப்பதாக பேச்சு அடிபடுகிறது. இவ்வாறு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் படப்பிடிப்புகளும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் அட்டப்பாடியில் நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் எனவும், மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ