சூர்யவம்சம் 2 படத்தில் சிவகார்த்திகேயன் தான் நடிக்க வேண்டும் என பிரபல இயக்குனர் கூறியுள்ளார்.
கடந்த 1997 ஆம் ஆண்டு சரத்குமார், தேவயானி, ராதிகா, மணிவண்ணன் ஆகியோரின் நடிப்பில் சூர்யவம்சம் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை விக்ரமன் இயக்கியிருந்தார். இதில் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். எதார்த்தமான ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இன்றுவரையிலும் இந்த படம் ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் இடம் பிடித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. நிலையில் தான் கடந்த 2023 ஆம் ஆண்டு சூர்யவம்சம் படத்தின் 26 ஆண்டுகள் நிறைவு நாளன்று நடிகர் சரத்குமார், “விரைவில் சூர்யவம்சம் 2” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுஅப்டேட் கொடுத்திருந்தார். ஆனால் இது தொடர்பான மற்ற அப்டேட்டுகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் தான் பிரபல இயக்குனரும் நடிகை தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் சமீபத்தில் நடந்த பேட்டியில் சூர்யவம்சம் 2 படம் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “சூர்யவம்சம் மிகப்பெரிய ஹிட் படம். இதன் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இதன் இரண்டாம் பாகம் உருவாக வேண்டும் என்றால் அதை விக்ரமன் சார் கையில் தான் இருக்கிறது. சூர்யவம்சம் படத்தில் சரத்குமார் – தேவயானிக்கு சக்திவேல் என்ற ஒரு மகன் கேரக்டர் இருக்கிறது. அந்த கேரக்டரில் இப்போது சிவகார்த்திகேயன் தான் நடிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் இருந்தால்தான் அது சூர்யவம்சம். இல்லையென்றால் அது வெளிச்சம் இல்லாத வம்சம் ஆகிவிடும்” என்று தெரிவித்துள்ளார்.