நாளை தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!
மாமன்
சூரி நடிப்பில் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ள மாமன் திரைப்படம் நாளை (மே 16) திரைக்கு வருகிறது. இந்த படத்தில் சூரியுடன் இணைந்து ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, கீதா கைலாசம், பால சரவணன், சுவாசிகா மற்றும் பலர் நடித்துள்ளனர். லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஹேசம் அப்துல் வாகப் இதற்கு இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிடி நெக்ஸ்ட் லெவல்
சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் டிடி நெக்ஸ்ட் லெவல். இந்த படம் ஹாரர் கலந்த காமெடி கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. பிரேம் ஆனந்தின் இயக்கத்திலும் ஆர்யாவின் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படம் நாளை (மே 16) திரைக்கு வர தயாராகி வருகிறது.
ஜோரா கைய தட்டுங்க
மாயாஜால வித்தை காட்டும் கலைஞரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் தான் ஜோரா கைய தட்டுங்க. இந்த படத்தில் யோகி பாபு நடித்திருக்கிறார். விநீஷ் மில்லினியம் இயக்கி உள்ள இந்த படம் நாளை (மே 16) திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.
நேசிப்பாயா
ஆகாஷ் முரளி – அதிதி சங்கர் ஆகியோரின் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வந்த படம் தான் நேசிப்பாயா. விஷ்ணுவர்தன் இயக்கியிருந்த இந்த படம் நாளை (மே 16) சன் நெக்ஸ்டில் வெளியாகிறது.
தி டோர்
கடந்த மார்ச் 28ஆம் தேதி பாவனா நடிப்பில் தி டோர் எனும் திரைப்படம் வெளியானது. ஜெய் தேவ் இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், நாளை (மே 16) சிம்பிளி சௌத் தளத்தில் வெளியாக இருக்கிறது.