spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைபுதிய வடிவில் புனரமைக்கப்படும் வள்ளுவனின் நினைவு சின்னம்…

புதிய வடிவில் புனரமைக்கப்படும் வள்ளுவனின் நினைவு சின்னம்…

-

- Advertisement -

வள்ளுவனின் நினைவு சின்னமான வள்ளுவர் கோட்டம் அழகிய வேலைப்பாடுகளுடன் இன்னும் பிரமாண்டமாக புனரமைக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளை கவரவுள்ள வள்ளுவர் கோட்டத்தின் காட்சிகளை விவரிக்கிறது இச்செய்தி தொகுப்பு.புதிய வடிவில் புனரமைக்கப்படும் வள்ளுவனின் நினைவு சின்னம்…உலக பொதுமறையான திருக்குறளை படைத்த வள்ளுவனுக்கு நினைவு சின்னம் இல்லையே என்ற ஏக்கத்தை போக்கும் விதமாக தமிழ்நாட்டில் தலைநகரான சென்னையில் 5 ஏக்கர் பரப்பளவில் 1974 ஆம் ஆண்டு கலைஞர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. உலகமே வியக்கும் திருக்குறளை போன்று நினைவு சின்னமும் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தும் விதமாக திருவாரூர் ஆழித்தேரை மாதிரி வடிவமாக கொண்டு, பல்லவக்கலை சிற்ப வேலைபாடுகளுடன் 128 ஆடி  உயரம் கொண்ட விண்ணை முட்டுவதை போன்று உணர்வை தரும் வகையிலாக கல்தேரும், காந்தார கலை வடிவில் தோரண வாயிலும், திராவிட கட்டடக் கலை பிரதிபலிக்கும் வகையில், கலைஞர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் சிற்பி கணபதி அவர்களைக் கொண்டு இரண்டு ஆண்டுகளில் அதாவது 1976 ஆம் ஆண்டு வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட்டு, சுற்றுலா தளமாக விளங்கி வந்ததது. ஆனால் கடந்த காலங்களில் உரிய முறையில் பராமரிக்கப்படாததால், சிதிலடைந்து பொலிவை இழந்து மோசமான நிலையில் இருந்தது.புதிய வடிவில் புனரமைக்கப்படும் வள்ளுவனின் நினைவு சின்னம்…இதை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூபாய் 80 கோடியில்  வள்ளுவர் கோட்டம் புனரமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து ஜனவரி 18 2024 ஆண்டில் இருந்து விறுவிறுப்பாக புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் புனரமைப்பு மேம்பாட்டு பணிகளில் கலையரங்கம், குறள்மணி மாட கூரை புனரமைப்பு, தரைகள் புதுப்பித்தல், குறள் மணிமாட ஓவியம் சீரமைத்தல், வளாக சுற்றுச் சுவர் புதுப்பித்தல், தூண்கள், நுழைவாயில் பகுதிகளில் சிற்ப வேலைபாடுகள், மாற்றுத் திறனாளிகள் நடைபாதை புதிய வடிவில் இன்னும் சிறப்பாக அமைக்கப்பட்டு வருகிறது.புதிய வடிவில் புனரமைக்கப்படும் வள்ளுவனின் நினைவு சின்னம்…புனரமைக்கப்படும் வள்ளுவர் கோட்டத்தின் கலையரங்கின் மேற்கூரையில் வள்ளுவனின் பிரமாண்ட படம் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு திருவாரூர் ஆழித்தேரை காண்பது இன்னும் வியப்பில் ஆழ்த்த கூடிய வகையில் உள்ளது. இதில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு  பிரத்தேயக மின் தூக்கி , பலநிலை வாகன நிறுத்துமிடம், உணவுக்கூடம், விற்பனை மையம் உள்ளது. அதோடு கட்டுமானத்தில் சிறப்பு சேர்க்கும் விதமாக மழைநீர் வடிகால் வசதி, 2 இலட்சம் கொள்ளளவு நீர் சேமிப்பு தொட்டி அமைத்தலும், சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பேவர் பிளாக் பாதை அமைத்தல், RO பிளான்ட் அமைத்தல், புல்வெளி அமைத்தல், செயற்கை நீரூற்று அமைத்தல், ஒளி ஒலி காட்சி அமைத்தல், கூட்ட அரங்கம் மற்றும் குறள்மணி மாடம் புதுப்பித்தல் பணி நடைபெற்று வருகிறது. வள்ளுவர் கோட்டம் கம்பீரமாக தோற்றம் அளிக்கும் வகையில் பிரமாண்டமான தோரணவாயில், அழகு மிளிரச் செய்யும் ஸ்தபதிகள் பதிக்கப்பட்டு வர்ணம் பூசும் பணிகள்  கலையரங்கம், VVIP போர்டிகோ, நீரூற்று, குறள் மணிமண்டபம் உள்ளது.

இன்னும் அழகிய வேலைப்பாடுகளுடன் பிரமாண்டமாக புனரமைக்கப்பட்டு வரும் வள்ளுவர் கோட்டத்தை விரைவில் திறக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதோடு பொதுமக்களிடம் எப்போது வள்ளுவர் கோட்டம் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

பெற்ற தாயின் மீது பாட்டில் வீசிய அன்புமணி! உடைந்து பேசிய ராமதாஸ்!

we-r-hiring

MUST READ