spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரை2026ல் ஸ்டாலின்தான் முதலமைச்சர்! எதை மீட்கப் போகிறார் எடப்பாடி? வெளுத்து வாங்கிய ஆ.ராசா எம்.பி.!

2026ல் ஸ்டாலின்தான் முதலமைச்சர்! எதை மீட்கப் போகிறார் எடப்பாடி? வெளுத்து வாங்கிய ஆ.ராசா எம்.பி.!

-

- Advertisement -

பாஜக உடன் திமுக கூட்டணி வைத்தபோது, அவர்களின் கொள்கைகளை எங்கள் மீது திணிக்கக்கூடாது என்று கட்டிப் போட்டோம். அதுபோன்று தற்போது அதிமுக கட்டிப் போட்டிருக்கிறார்களா? என திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

வக்பு திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரானது – திருமாவளவன் பேச்சு…

we-r-hiring

சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுக தரப்பில் மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புகள் குறித்தும், எதிர்க்கட்சிகள் திமுக மீது வைக்கும் விமர்சனங்கள் குறித்தும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:-  திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்கிற உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதற்கு காரணம் மொழி, மண், மானம் காக்க ஓரணியில் திரள்வோம் என்று நாங்கள் சொல்கிறோம். அதில் ஒரு தர்க்கம் உள்ளது. அதை தான் திராவிடியன் ஸ்டாக் என்று அண்ணா சொன்னார். இது பாஜக என்கிற ஒரு கட்சியை எதிர்த்து வர வில்லை. அவர்களின் கொள்கையை எதிர்த்து மேற்கொள்கிறோம். தமிழை, தமிழ் பண்பாட்டை பாஜக அங்கீகரிப்பது கிடையாது. தமிழ்நாடு அரசாங்கத்தின் எந்த திட்டங்களுக்கும் நிதி ஒதுக்குவது இல்லை. எந்த புயல் வந்தாலும் மகாராஷ்டிரா, ஆந்திவுக்கு கொடுப்பதை விட குறைந்த அளவிலான நிதியே தருகிறார்கள். இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினாலும் அவர்கள் பதில் சொல்வதில்லை. மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு இவ்வளவு ஓரவஞ்சனைகளை செய்கிறபோது, இந்த மண், மானம், மொழியை காக்க ஓரணியில் திரள்வோம் என்று சொல்கிறோம். இதில் ஒரு லாஜிக் உள்ளது.

எடப்பாடி பழனிசாமி என்ன சொல்கிறார், மக்களை காப்போம் என்று சொல்கிறார். அதிமுக ஆட்சிக்காலத்தில் லாக்அப் மரணம் நடைபெற்றபோது ஒரு முதலமைச்சர் எப்படி எதிர்வினை ஆற்றினார். பாதிக்கப்பட்டவர்களிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு நடைபெற்றதற்கு வருத்தம் தெரிவிக்கும் மனவலிமை எடப்பாடி பழனிசாமியிடம் உண்டா? இனிமேல் இதுபோன்று நடக்கக்கூடாது என்றுதான் ஆய்வுக்கூட்டத்தை நடத்தினோம். வெளிப்படையாக வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தோம். அதிமுக ஆட்சியில் நடைபெற்ற லாக்அப் மரணத்தில் முதலமைச்சர் எடப்பாடி என்ன எதிர்வினை ஆற்றினார்? எத்தனை நாட்கள் கழித்து வழக்கை சிபிஐக்கு மாற்றினார்? எத்தனை நாட்கள் கழித்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்? எது நாணயமான அரசு என்று பாருங்கள். ஒரு நாட்டில் குற்றச் செயல்கள் எங்குமே நடைபெறாமல் இருக்காது. ஆனால் அப்படி நடைபெறுகிற போது ஒரு நாணயமான முதலமைச்சர் எப்படி அதை கையாளுகிறார் என்பதில் தான் அவரது நம்பகத்தன்மை, நேர்மை தெரியும்.

எடப்பாடி சுற்றுபயணத்தில் தமிழகத்தை மீட்போம் என்று சொல்கிறார்? யார் கட்டுப்பாட்டில் இருந்து  மீட்கப்போகிறார்? திமுகவிடம் இருந்து தமிழகத்தை காப்போம் என்றால்? திமுக என்ன செய்கிறது? கோரப்பிடியில் உள்ளதா?  மொழியை காப்பாற்றவில்லையா? மோடி – அமித்ஷாவிடம் சரணடைந்துவிட்டோமா நாங்கள்? பாஜகவின் பிடியிலிருந்து அதிமுகவை காப்பாற்றுவதே எங்களுக்கு பெரிய விஷயமாக உள்ளதே. ஏனென்றால் ஒரு நல்ல எதிர்க்கட்சி இருக்க வேண்டும். திராவிட அரசியல் இருக்க வேண்டும். தமிழகத்தை மீட்போம் என்று சொல்ல எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தார்மீக உரிமை உள்ளது?. நீங்கள் ஏற்கனவே உங்களையே அடகுவைத்து விட்டீர்களே. உங்களை மீட்பதே எங்களுக்கு பெரிய பாடாக உள்ளதே. தமிழ்நாட்டின் அடையாளங்கள், திராவிடம், தமிழ் மொழியின் பெருமைகள், தமிழர் கலாச்சாரம் போன்றவற்றை வெவ்வேறு வடிவங்களில் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் சேர்த்து வைத்துள்ளனர். இவற்றை காப்பாற்றுவது தான் திமுகவின் வேலை. அவற்றை அடகுவைப்பதுதான் அதிமுகவின் வேலையாகும்.

கீழடி குறித்து அறிக்கை வெளியிட உங்களுக்கு என்ன பிரச்சினை? பாஜக உடன் கூட்டணியில் உள்ள எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவிடம் அறிக்கையை வெளியிட சொல்வாரா? திமுகவால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை என்று சொல்கிறீர்கள். சரி எடப்பாடி பழனிசாமி இந்த தேர்தல் அறிக்கையில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பிரதமர் மோடியிடம் சொல்லி நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொல்ல முடியுமா? கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று அதிமுக தரப்பில் சொல்கிறார்கள். பாஜக கொள்கை வேறு, திமுகவின் கொள்கை வேறாக இருக்கிறபோது கூட்டணி வைத்தது. ஆனால் அவர்களின் கொள்கையை எங்கள் மீது திணிக்கக் கூடாது என்று கட்டிப் போட்டோம். அதுபோன்று தற்போது கட்டிப் போட்டிருக்கிறார்களா? இதற்கு பிறகாவது நீட் எடுக்கப்பட வேண்டும். EWS சட்டம் எடுக்கப்பட வேண்டும். வக்பு சட்டம் தவறு என்று ஒரு குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்கி, பாஜகவிடம் கையெழுத்து வாங்கிட யோகியதை உள்ளதா?, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ