spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகாமராஜர் ஏசி... சிவாவை விமர்சிப்பதா? எகிறி அடித்த ஷாநவாஸ்!

காமராஜர் ஏசி… சிவாவை விமர்சிப்பதா? எகிறி அடித்த ஷாநவாஸ்!

-

- Advertisement -

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அடிமையாக இல்லை. ஆளுமையாக இருக்கிறது என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட விசிக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆளுர் ஷாநவாஸ் பேசியதாவது:- மக்களிடம் நம்முடைய திரும்ப திரும்ப நாம் சொல்ல வேண்டி இருக்கிறது. ஏனென்றால் இந்த மண்ணை ஒரு உத்தர பிரதேசமாக மாற்றிவிட முடியாதா? என்று பல தரப்பிலும் இன்றைக்கு வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.  பல முனைகளிலும் அவர்கள் வேலை செய்கிறார்கள். அந்த வேலையை முறியடிக்க வேண்டும் என்றால் நாம் வேலை செய்ய வேண்டும். நாம் நமது வரலாறை சொல்ல வேண்டும். இந்நிலையில், நமது வரலாற்றை சொன்னாலே பிரச்சினையாக மாறுகிறது. சர்ச்சையாக மாறுகிறது. சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார் எம்ஜிஆர் என்று சொன்னால் அது ஏற்கனவே அந்த திட்டத்தை கொண்டுவந்த தலைவரை இழிவுபடுத்துவது ஆகுமா? கிடையாது.

மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்தினார் காமராஜர் என்று ஒரு நிலை இருக்கிறது. அது அவருக்கான புகழாரம். சத்துணவு திட்டத்தை கொண்டுவந்தார் எம்ஜிஆர் என்றால் அது காமராஜரை இழிவுபடுத்துவது ஆகாது. அதை எம்ஜிஆரின் வரலாறை சொல்வதாக தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் இப்படி சொல்வதால், காமராஜரை சிறுமைபடுத்திவிட்டோம் என்று சிலர் சொல்கிறார்கள். வரலாற்றை சொலவதன் மூலம், அது இன்னொரு தலைவரை அவமதிப்பது என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. வரலாறே சொல்லக்கூடாது என்று நினைக்கின்றனர். திராவிட இயக்கத்தின் வரலாற்றை சொல்வதன் மூலம் இங்கே உண்மை தெரிந்துவிடும் என்கிற அச்சம் அவர்களிடம் உள்ளது. அதனால் திரும்ப திரும்ப வரலாற்றை பேச வேண்டிய அவசியம் உள்ளது.

"காமராஜர் தனது தாயாருக்கு மாதம் எவ்வளவு தொகை அனுப்புவார் தெரியுமா?"- நடிகர் சிவக்குமார் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
File Photo

தந்தை பெரியார், தமிழை தாய்மொழியாக கொண்டிராதவர் என்பதால், தன்னுடைய இயக்கத்திற்கு தமிழர் கழகம் என்ற பெயர் வைக்க முடியாத நிலையில், திராவிடம் என்கிற சொல்லை கொண்டுவந்து புகுத்தி, திராவிடத்துக்குள் பதுங்கி கொண்டார். தமிழர்களை திராவிடர்களாக மாற்றிவிட்டார் என்று ஒரு பொய் உரை சொல்லப் படுகிறது. தனித்தமிழ் இயக்கம் நடத்திய மறைமலை அடிகளார் தனது நாட்குறிப்பில் எழுதியுள்ளார், 1918ஆம் ஆண்டு பாளையங்கோட்டையில் நடைபெறும் திராவிட இளைஞர் கழகம் மாநாட்டிற்கு என்னை அழைத்தார்கள். நான் செல்கிறேன் என்று தெரிவித்துள்ளார். பெரியார் திராவிடர் கழகம் தொடங்கியது 1944ஆம் ஆண்டு ஆகும். அப்போது, திராவிடர் என்ற சொல்லை பெரியார் கண்டுபிடித்து, அதற்குள் பதுங்கிகொண்டார் என்ற பொய்யுரைக்கு மறைமலை அடிகளாரே பதில் அளித்து விட்டார். பெரியாருக்கு கால் நூற்றாண்டுக்கு முன்பே இங்கே திராவிடம் என்ற சொல்லை கொண்டு இயக்கங்கள் இயங்கி உள்ளன.

அதற்கும் முன்பே 1885ல் அயோத்திதாச பண்டிதர் திராவிட பாண்டு என்கிற இதழை, ஜான் ரத்தினத்தோடு இணைந்து நடத்தினார். 1890களில் திராவிட மகாஜன சபை என்கிற அமைப்பை நடத்துகிறார். தங்களை ஆதிதிராவிடர்களாக பதிவு செய்யுங்கள் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பில் சொல்கிறார். ஆதி தமிழர்களை, கலைஞர் வந்து ஆதிதிராவிடர்கள் என்று மாற்றிவிட்டதாக இன்றைக்கு பொய்யுரை சொல்கிறார்கள். ஆனால் உண்மை அது இல்லை. ஆதி திராவிடர் என்ற பெயரில் எங்களை பதிவு செய்யுங்கள் என்று சொன்னவர் பண்டிதர் அயோத்தி தாசர். இப்படி வரலாற்றை கிளறி பார்த்தால் அது வேறு ஒன்றை சொல்கிறது. ஆனால் திராவிட இயக்கம் குறித்து வெளியே சொல்லப்படுகிற அத்தனையும், வேறு ஒன்றாக இருக்கிறது.

திராவிட ஒவ்வாமை எந்த எந்த வடிவங்களில் உள்ளன. விசிக, திமுக உடன் கூட்டணியில் இருக்கிறது. காலையில் எழுந்தது முதல் இரவு உறங்க போகும் வரை எந்த ஊடகத்தை திறந்தாலும் இந்த கூட்டணியில் ஒரு பிணக்கை ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் பார்க்கலாம். அவர்களுடைய திட்டம், எண்ணம் ஈடேறவில்லை என்ற உடன், அப்படியே எங்களுடைய தலைவரை எவ்வளவு சிறுமைபடுத்துகிறார்கள் என்று பார்ப்பீர்கள். கடைசி வரை இவர்களுக்கு 2  சீட்டுகள் தான். கடைசி வரை பிளாஸ்டிக் சேர்தான். ஆனால் உண்மை என்ன? திமுகவோடு ஒரு அடிமை மனநிலைமையோடு நாங்கள் பயணிக்கிறோமா? ஆளுமையாக பயணிக்கிறோம். அடிமை மனநிலையோடு யார் பயணிக்கிறார் என்று உங்களுக்கு தெரியும். அதிமுக என்கிற ஒரு கட்சி, தனிக்கட்சி என்று நினைத்துக் கொண்டிருந்தோம். அது அப்படி இல்லை.

விசிக தொடங்கியது முதல் சந்தித்த 11 பொதுத் தேர்தல்களில் 7 முறை திமுகவுடன் சந்தித்துள்ளோம். எப்படி இது சாத்தியம்? வெறுமனே தொகுதி பங்கீடு, அல்லது பிற ஆதாய நோக்கங்கள் என்கிற அளவில் அதை தொடர முடியுமா? ஒரு கொள்கை உறவு இருப்பதால் தான் தொடர முடிகிறது. கொள்கை உறவு இல்லாவிட்டால் இது சாத்தியமே இல்லை. 2019 தேர்தல் தொடங்கி 2026 தேர்தல் என்று 4 பொதுத்தேர்தலை நோக்கி ஒரு கூட்டணி செல்கிறது என்றால் எப்படி சாத்தியம்? கொள்கையை சொல்லி இந்த கூட்டணி இயங்குகிறது. அதனால் இந்த கூட்டணியை அசைக்க முடியவில்லை. அதனால் அவர்கள் அன்றாடம் என்ன என்னவோ செய்து பார்க்கிறார்கள். எப்படியோ கூட்டணிக்குள் உடைப்பை ஏற்படுத்திவிட முடியாதா? அதற்கு பல முனைகளில் இருந்தும் ஆட்கள் வருவார்கள். அவர்களுக்கு திராவிட அலர்ஜி ஏற்கனவே இருக்கிறது.

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை பாஜக மீறுகிறது - திருச்சி சிவா

திராவிடத்தின் உண்மையான பங்களிப்பை பேசினாலே, உடனே பேசியவர்களை சிறுமைப்படுத்துகிற முயற்சி நடக்கிறது. உளவியல் ரீதியாக தாக்குதல் நடத்திவிடுவார்கள். சட்டமன்றத்தில் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஒருவர் நீங்கள் என்ன திமுககாரர் போல பேசுகிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு திருமாவளவன் எதிர்வினையாற்றினார். நாங்கள் தந்தை பெரியாரின், திராவிட இயக்க தலைவர்களின் பங்களிப்பை நினைவுகூறக்கூடிய நின்றியுள்ளவர்களாக இருக்கிறோம். திமுக என்கிற கட்சிக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்று அதை சுருக்கி பார்க்க கூடாது. திராவிட இயக்கத்திற்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். ஏனென்றால் அவ்வளவு பெரிய பங்களிப்புகளை இந்த இயக்கம் தந்துள்ளது. அம்பேத்கர் இயக்கம் என்றுதான் விசிக வேர் விட்டு வந்துள்ளது. ஆனால் அம்பேத்கரின் கொள்கையை பிரதிபலிக்கிறது என்பதால் நாங்களும் திராவிட இயக்கத்தை சார்ந்தவர்கள் என்று சொல்லக்கூடிய இடத்திற்கு நாங்கள் வந்துவிட்டோம். ஏனென்றால் அந்த அளவுக்கு இன்றைக்கு திராவிட இயக்கம் குறிவைக்கப்படுகிறது.

இன்றைக்கு திருச்சி சிவா பேசியதை வைத்துக்கொண்டு ஒரு சர்ச்சை. அதற்கு தமிழருவி மணியன் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். காமராஜர் மீது மிகப்பெரிய மதிப்பை வைத்துள்ளோம். விசிகவின் அடையாள தலைவர்களில் ஒருவராக காமராஜரை வைத்து போற்றுகிறோம். அந்த காமராஜரை பற்றி உயர்வாக பேசிவிட்டு, தமிழருவி மணியன் திருச்சி சிவாவை சாடுகிறார். காரணம் திருச்சி சிவா பேசிய அந்த விவகாரம் குறித்து கருத்து சொல்கிறார். அப்படியே பார்த்தோம் என்றால் கொஞ்ச நாளைக்கு முன்பாக இதைவிட மோசமான மொழியில், காமராஜரை பற்றி தமிழருவி மணியன் பேசி வைத்துள்ளார். அதில் தமிழருவி மணியன் காமராஜரின் கடைசி காலத்தில் ஏசி இல்லாமல் ஒரு மணிநேரம் கூட இருக்க முடியாத நிலை இருந்ததாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இதை யாராவது சர்ச்சை ஆக்கினார்களா? இதை யாராவது கேள்விக்கு உள்ளாக்கினார்களா? எப்படி தமிழருவி மணியன் காமராஜரை பற்றி இப்படி பேசலாம் என்று ஊடக விவாதம் நடைபெற்றதா? அப்போது என்ன நடக்கிறது இங்கே? கொஞ்சம் அசந்தால் அடித்து காலி செய்துவிடுவார்கள். அதனால் அசரக்கூடாது என்பதற்காகதான்  வரலாற்றை படித்து, திராவிட இயக்கத்தின பங்களிப்பை எடுத்து சொல்வோம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ