spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகோலிவுட்டில் ஒரே நாளில் நான்கு படங்கள் ரிலீஸ்… தனுஷின் படமும் ரீ- ரிலீஸ்…

கோலிவுட்டில் ஒரே நாளில் நான்கு படங்கள் ரிலீஸ்… தனுஷின் படமும் ரீ- ரிலீஸ்…

-

- Advertisement -

கோலிவுட்டில் நாளை ஒரே நாளில் நான்கு படங்கள் ரிலீஸ் செய்யப்படுகிறது. அதோடு நாளை மறுநாள் தனுஷின் நடித்த திரைப்படமும் ரீ- ரிலீஸ் செய்யப்படுகிறது.கோலிவுட்டில் ஒரே நாளில் நான்கு படங்கள் ரிலீஸ்… தனுஷின் படமும் ரீ- ரிலீஸ்…தமிழ் சினிமாவில் இந்த வார வெள்ளிக்கிழமை,  பசங்க திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ள பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு, சரவணன், தீபா உள்ளிட்ட பலர் நடிப்பில் காதலை மையப்படுத்தி, ஃபேமிலி டிராமா ஆக உருவாக்கி உள்ள திரைப்படம் தலைவன் தலைவி.கோலிவுட்டில் ஒரே நாளில் நான்கு படங்கள் ரிலீஸ்… தனுஷின் படமும் ரீ- ரிலீஸ்…இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.  இப்படத்தின் பொட்டல முட்டாயே பாடல் ஏற்கெனவே வெளியாகி  வைரல் ஆன நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் டிரைலரும் ரசிக்கும்படியாக அமைந்தது. இதற்கு முன்பாக விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படம் கவனம் பெறாததால், இப்படத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் விஜய் சேதுபதி உள்ளார். இந்த வாரம் நம்பிக்கைக்குரிய படமாக உள்ள தலைவன் தலைவி நாளை வெளியாகிறது.கோலிவுட்டில் ஒரே நாளில் நான்கு படங்கள் ரிலீஸ்… தனுஷின் படமும் ரீ- ரிலீஸ்…சுதீஷ் சங்கர் இயக்கத்தில் நடிகர்கள்  ஃபகத் ஃபாசில், வடிவேலு ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாரீசன்.  மாமன்னன் படத்தில் இவர்களது கூட்டணி பேசப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அறிமுகம் இல்லாத இருவர் இருசக்கர வாகனத்தில் நெடுந்தோறும் பயணிக்கும் வகையில் திரில்லர் களத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான கதை,திரைக்கதை,  வசனத்தை கிருஷ்ணமூர்த்தி எழுதியுள்ளார். படம் சார்பாக  செய்தியாளர் சந்திப்பு உட்பட எந்த ஒரு விளம்பர நிகழ்ச்சியும் நடைபெறாமல் நேரடியாக நாளை திரைக்கு வரும் இப்படம் சத்தம் இல்லாமல் சாதிக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.கோலிவுட்டில் ஒரே நாளில் நான்கு படங்கள் ரிலீஸ்… தனுஷின் படமும் ரீ- ரிலீஸ்…ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில், பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஹரி ஹர வீர மல்லு.  இப்படத்தில் பாபி தியோல், சத்யராஜ், நிதி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளிலும் இன்று திரைக்கு வந்துள்ளது. இதற்கு கீரவாணி இசையமைத்துள்ளார். நீண்ட நாட்களாக தள்ளிப்போன இப்படம் இறுதியாக இன்று வெளியான நிலையில் பவன் கல்யாண ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.கோலிவுட்டில் ஒரே நாளில் நான்கு படங்கள் ரிலீஸ்… தனுஷின் படமும் ரீ- ரிலீஸ்…மேலும் கே. வெண்பா கதிரேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள நாளை நமதே என்ற திரைப்படமும் நாளை திரைக்கு வருகிறது.கோலிவுட்டில் ஒரே நாளில் நான்கு படங்கள் ரிலீஸ்… தனுஷின் படமும் ரீ- ரிலீஸ்…இதனைத் தொடர்ந்து தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை மறுநாள் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ள புதுப்பேட்டை திரைப்படம்  ரீரிலீஸ் செய்யப்படுகிறது.

விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ”கேப்டன் பிரபாகரன்” – ரீ ரிலீஸ்!

MUST READ