தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் கடந்த ஜூலை மாதம் ‘தலைவன் தலைவி’ திரைப்படம் வெளியாகி வெற்றி நடைபோட்டு வருகிறது. இது தவிர ‘ட்ரெயின்’, ‘காந்தி டாக்ஸ்’ போன்ற பல படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.விஜய் சேதுபதி சினிமாவில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல்வேறு நலத்திட்டங்களை செய்வதனாலும், நற்செயல்களில் ஈடுபடுபவர்களை ஊக்குவிப்பதனாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்நிலையில்தான் கடந்த சில வருடங்களாக கிட்டத்தட்ட 3500 கிலோமீட்டர் ட்ரை சைக்கிள் மூலம் பயணித்து இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் யூடியூபர்களான சிராஜ் மற்றும் அருண் ஆகிய இருவரையும்
சமீபத்தில் விஜய் சேதுபதி சந்தித்துள்ளார். அப்போது அவர்கள் விஜய் சேதுபதியிடம், “எங்களுக்கு சினிமா தான் கனவு அதற்கு உதவி செய்யுங்கள்” என்று சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளனர். அதற்கு விஜய் சேதுபதி, “நீங்கள் ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் படிக்க வேண்டுமா? நான் உங்களை படிக்க வைக்கிறேன். வேறு எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்க தம்பிகளா நான் செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் அறிந்த பலரும் விஜய் சேதுபதியை பாராட்டி வருகின்றனர். இது தவிர விஜய் சேதுபதி அந்த இளைஞர்களின் வீடியோவை பார்த்து மனதார பாராட்டி, அவர்களை அரவணைத்து முத்தமிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- Advertisement -