வேளச்சேரியில் புதைவிட கம்பிகளை மாற்றுவது தொடர்பாக மின்சார துறையுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மேயர் பிரியா பதில் அளித்துள்ளாா்.சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் பேசிய 13வது மண்டலக்குழு தலைவர் துரைராஜ், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என்றும் விரைவுச்சாலை பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்றும், வேளச்சேரியில் மின்சார வாரியத்தின் புதை விட கம்பிகளை மாற்றுவது தொடர்பாக ஒரு தனித்திட்டம் செய்ய வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்த மேயர் பிரியா ரேஸ்கோர்ஸ் விரைவு சாலை பணிகளை மேற்கொள்ள 28 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு அரசின் நிர்வாகம் அனுமதி பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். மின்சார வாரிய பிரச்சினைகளை பொருத்தவரையில் மின்சார துறையுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
“உங்களுடன் ஸ்டாலின்”,”முதல்வரின் முகவரி” மனுக்கள் ஆய்வு – அமைச்சர் தா.மோ.அன்பரசன்
