spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"உங்களுடன் ஸ்டாலின்","முதல்வரின் முகவரி" மனுக்கள் ஆய்வு - அமைச்சர் தா.மோ.அன்பரசன் 

“உங்களுடன் ஸ்டாலின்”,”முதல்வரின் முகவரி” மனுக்கள் ஆய்வு – அமைச்சர் தா.மோ.அன்பரசன் 

-

- Advertisement -

“உங்களுடன் ஸ்டாலின்” மற்றும் “முதல்வரின் முகவரி” உள்ளிட்ட திட்டங்களில், பொதுமக்களின் மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து சென்னையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன்  ஆய்வு நடத்தினார்."உங்களுடன் ஸ்டாலின்","முதல்வரின் முகவரி" மனுக்கள் ஆய்வு - அமைச்சர் தா.மோ.அன்பரசன் 

சென்னை கிண்டி திரு.வி.க.தொழிற்பேட்டை தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் அலுவலகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வரும் பணிகள் குறித்து, அத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

we-r-hiring

இதில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், கலைஞர் கைவினை திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரி குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் எவ்வாறு செயல்பட்டு வருகின்றன என ஆராயப்பட்டது. எத்தனை எண்ணிக்கையிலான பயனாளிகளை திட்டங்கள் அடைந்துள்ளன என்று ஆய்வு செய்த அமைச்சர் அன்பரசன், “உங்களுடன் ஸ்டாலின்” மற்றும் “முதல்வரின் முகவரி” ஆகிய சிறப்பு முகாம்களில் அளிக்கப்பட்ட பொதுமக்களின் மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்து, தீர்வுப் பணிகளை துரிதப்படுத்த ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல் ஆனந்த், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழக முதன்மைச் செயலாளர் கார்த்திக் மற்றும் அனைத்து மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

100-க்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் வாகனங்கள்… ஏற்றுமதி செய்யும் சுசுகி…

MUST READ