spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு நாளை திட்டமிட்டபடி நடைபெறும்..!!

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு நாளை திட்டமிட்டபடி நடைபெறும்..!!

-

- Advertisement -

தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான (PG Assistant) தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவித்துள்ளது.முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு நாளை திட்டமிட்டபடி நடைபெறும்..!!தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு  திட்டமிட்டபடி நாளை காலை 10 மணி – மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 809 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள் அதற்காக தேவையான ஆவணங்களுடன் நேரம் தவறாமல் தேர்வு மையங்களுக்கு வருமாறு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை நடத்தும் தீர்மானத்தை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே எடுத்திருந்தது. அதற்கான  அதிகாரப்பூர்வ அறிவிப்பும்  வெளியிட்டப்பட்டிருந்தது.

we-r-hiring

இதற்கிடையில், அத்தேர்வுக்கான பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதனால் அத்தேர்வை தாங்கள் எதிர்கொள்வதற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே இந்த தேர்வை ஒத்திவைக்குமாறு  தேர்வர்கள் கோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், ஆசிரியர் தேர்வு வாரியம் அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ள நிலையில், தேர்வு நாளை திட்டமிட்டபடி நடைபெறும் என்று உறுதிப்படுத்தியுள்ளது. இதனால், தேர்வுக்குத் தயாராகியிருக்கும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் நாளைய தேர்வுக்கான இறுதி தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் விரிசல்…நடுவானில் பயணிகளின் திக் திக் பயணம்….

MUST READ