பயணிகளின் வசதிகளுக்காகவும் பாதுகாப்பிற்காவும் தனியார் பேருந்துகளை போலவே வால்வோ பேருந்துகளை வாங்கி விரைவில் இயக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு நடப்பு நிதிஆண்டு 2025-2026-ல், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு 130 புதிய பேருந்துகளை பொது மக்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்துள்ளது. அவற்றில் 110 குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளும், 20 Multi Axle சொகுசு பேருந்துகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி 20 Multi Axle பேருந்துகளை கொள்முதல் செய்வதற்காக திறந்த வெளி ஒப்பந்தம் மூலம் தேர்வு செய்யப்பட்ட பெங்களூரில் அமைந்துள்ள Volvo நிறுவனத்தில், கூண்டு கட்டும் பணியினையும், உள் கட்டமைப்பு வசதிகளையும், அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார்.

இவ்வாய்வின் போது Multi Axle சொகுசு பேருந்தினை இயக்குவதற்காக பயிற்சி பெற்று வரும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. ஆய்வின் போது மேற்படி நிறுவனத்தின் பயிற்சி ஓடுதளத்தில் பேருந்தினை சோதனை முறையில் இயக்கி பார்த்தனர். முதற்கட்டமாக வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் 20 வால்வோ பேருந்துகளை இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த டைரக்டரை எனக்கு சின்ன வயசுல இருந்தே பிடிக்கும்…. துருவ் விக்ரம் பேட்டி!