தமிழக முழுவதும் இன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்ற வருகின்றது. கிராம மக்களுடன் நேரடியாக காணொளி வழியாக மக்களின், குறைகளை, கோரிக்கைகளை, தேவைகளை தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டறிந்தாா்.
விழுப்புரம் அருகே உள்ள கொண்டங்கி ஊராட்சியைச் சேர்ந்த மக்களிடம் காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறைகளை கேட்டு அறிந்தார். அப்பொழுது பேசிய கொண்டங்கி கிராமத்தை சேர்ந்த ரேவதி என்ற பெண் எங்கள் கிராமத்தில் இருந்து எல்லிஸ்ச்சித்தரம் சாலை வரை மின்விளக்குகள் அமைக்க வேண்டும், குடிநீர் மேல் நீர் தேக்க தொட்டி ஒன்று அமைத்து தர வேண்டும், வெள்ள தடுப்புச்சுவர் என மூன்று கோரிக்கைகளை முதல்வரிடம் நேரடியாகவே முன்வைத்தார். அதனை கேட்டுக்கொண்ட முதல்வர் அதை செய்து கொடுப்பதாக தெரிவித்தார்

இதுகுறித்து முதல்வரிடம் காணொளி வாயிலாக கோரிக்கை வைத்த பெண் ரேவதி, கூறுகையில் ,முதல்வரே நேரடியாக எங்கள் கிராமத்தில் தேவைகளை கேட்டறிந்தது மகிழ்ச்சியாக உள்ளது. நானும் எங்கள் கிராமத்துக்கு தேவையான கோரிக்கையை தெரிவித்து அவரும் செய்தி தருவதாக கூறியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக அந்த பெண் தெரிவித்துள்ளாா்.
அடுத்த கட்சி கொடியை காட்டும் அளவு அதிமுக தரம் தாழ்ந்து விடவில்லை – செல்லூர் ராஜு ஆவேசம்