த.வெ.க தலைவரும் நடிகருமான விஜய் கரூரில் நடத்திய பிரச்சாரத்தின் போது 41 பேர் உயிரிழந்தனர். அந்த வழக்கு தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் அனல் பரக்க வாதங்கள் நடைபெற்றது. பின்னர் அரசு தரப்பில் பிரமாண பத்திரமர தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தும் இன்னும் பற மனுதாரர்கள் எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யவும் அனுமதி அளித்து தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் கரூரில் செப்டம்பர் 27ல் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தை, பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வில்லிவாக்கத்தை சேர்ந்த தினேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தாா். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில், சிறப்பு பலனாய்வு குழு அமைத்து உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்து தவெக தரப்பில் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் பாராபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கடந்த 8 ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதேபோல், கரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மறுத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்து பாஜகவின் உமா ஆனந்தன் கடந்த 7-ம் தேதி தொடர்ந்த மேல்முறையீட்டு மனவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு , இந்த வழக்கு விசாரணை அக்டோபர் 10 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தனர். அதன் அடிப்படையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சாரியா அமர்வு முன் விசாரணைன்கு வந்தது.
அதில், ஒரு மனுதாரர் தரப்பின் வாதங்கள், ரௌடிகள் கூட்டத்தில் நுழைந்ததாலும், காவல்துறை தடி அடி நடத்தப்பட்டதாலும் தான் விபத்து ஏற்பட்டது என்றும். பிரச்சாரம் மேற்கொண்டிருந்த விஜயின் மீது செருப்பு எறியப்பட்டது. அப்போது கூட கூட்டத்தில் எந்த ஒரு சலசலப்பும் இல்லை அதன் பின்பாக திடீரென காவல்துறை தடியடியை நடத்தியது. எதற்காக தடியடி நடத்தப்படுகிறது என்பது கூட யாருக்கும் தெரியாமல் கூட்டத்தினர் சிதறி ஓடினார்கள். அதற்கு முன்பாக அந்த கூட்டத்திற்குள் எந்த ஒரு பதிவு எண்ணும் இல்லாத ஒரு ஆம்புலன்ஸ் உள்ளே வேகமாக நுழைந்தது. இவ்வாறு அந்த கூட்டத்தில் சமூக விரோதிகள் களம் இறக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றும்.
மேலும் அந்த கூட்டத்தில் தூக்கி அடிக்கப்பட்ட தண்ணீர் பாட்டில்களில் திமுக உடைய எம்.எல்.ஏ.வான செந்தில் பாலாஜி உடைய புகைப்படம் இருந்தது என்றும். அதனால் இந்த விவகாரத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.
மேலும் இந்த சம்பவம் நடைபெற்ற பின்பாக தமிழ்நாட்டினுடைய மூத்த காவல் அதிகாரி மற்றும் ஐஏஎஸ் அதிகாரி ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி இதில் அரசு மீதுதோ காவல்துறை மீதோ எந்த ஒரு தவறும் இல்லை என்று முதலிலேயே அவர்கள் நியாயப்படுத்தி இருந்தார்கள் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
அதேபோன்று கரூர் பகுதியில் இருக்கக்கூடிய எம்.எல்.ஏவான செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்திப்பை நடத்தி, இதில் காவல்துறை அல்லது அரசினுடைய எந்த ஒரு தவறும் இல்லை என்பதை அவரும் நியாயப்படுத்தி இருக்கிறார். இது அனைத்துமே சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் இந்த சம்பவத்தில் இறந்தவர்களுடைய உடல்களுக்கு அவசர அவசரமாக உடற்கூறாய்வு நடத்தப்பட்டிருக்கிறது.
41 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் அவர்களுடைய உடல்களை உடற்கூறு ஆய்வு செய்ய இரவோடு இரவாக அத்தனை மருத்துவர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது எல்லாம் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.
இது குறித்து நீதிபதிகள் தரப்பில்,
இந்த விவகாரத்தைப் பொறுத்த வரைக்கும் இரு தரப்பும் குற்றம் சாட்டிக்கொண்டோ அல்லது ஒரு தரப்பை இன்னொரு தரப்பு குறை சொல்லி கொண்டு இருக்க முடியாது. என்ன நடந்தது என்பது வெளிவர வேண்டும்
உயிரிழந்தவர்களுடைய உடல்களை உடற்கூர் ஆய்வு இரவிலேயே நடத்தப்பட்டு இருக்கிறது. உடற்கூறாய்வு நடத்துவதற்கான அங்கு இருக்கக்கூடிய கட்டமைப்பு என்ன எத்தனை உடற்கூறு ஆய்வுக்கான டேபிள் உள்ளது என தரவுகள் சமர்ப்பிக்கப் பட வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில்,
இந்த விவகாரத்தில் அரசு மீதும் காவல்துறை மீதும் அடுக்கடுக்கான புகார்களை, பழிகளை தொடர்ச்சியாக சுமத்தி வருகிறார்களே தவிர இதில் என்ன நடந்தது என்பதை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். மேலும் இந்த விவகாரத்தை பொருத்தவரைக்கும் மாவட்ட நிர்வாகத்தினுடைய அனுமதி பெற்றும், சட்டபடியும் இரவில் உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த விவகாரத்தில் சரியான தரவுகள் மற்றும் ஆதாரங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உள்ளோம். அதே வேளையில் தேர்தல் பரப்புரையின் போது ரவுடிகள் களம் இறக்கப்பட்டார்கள் ஆளுங்கட்சிணருடைய நபர்கள் களமிறக்கப்பட்டார்கள் என்று கூறுவதெல்லாம் ஏற்க முடியாது. ஆதாரம் இல்லாதது. இதற்கான எந்த ஒரு ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை வெறுமனே ஒரு மனுவை வைத்துக் கொண்டு இது போன்ற குற்றச்சாட்டை கூறி வருகிறார்கள் என அரசு சார்பில் வாதிடப்பட்டது.
மேலும் சேலத்தில் ஒரு மாநாட்டிற்காக வந்திருந்த சுமார் 200 மருத்துவர்கள் இந்த உடற் கூறாய்வில் பயன்படுத்தப்பட்டார்கள். பல்வேறு மருத்துவமனைகளில் இந்த உடற் கூறு ஆய்வு நடத்தப்பட்டது .
இரவிலேயே நடத்துவதற்கான காரணம் என்னவென்றால் உயிரிழந்த பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தினர் அரசிடமும் நிர்வாகத்திடமும் கோரிக்கை வைத்ததன் அடிப்படையிலேயே அது நடத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
பாதுகாப்பு குறைபாடு என்று கூறுகிறார்கள். ஆனால் 600 காவல்துறையினர் அதற்காக அந்த பிரச்சாரத்திற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பட்டிருக்கிறார்கள்.
நண்பகல் 12 மணிக்கு வரவேண்டிய விஜய் இரவு 7:00 மணிக்கு அவர் வந்திருக்கிறார். காலை முதலே அந்த பகுதியில் குழுமி இருந்த அந்த கூட்டமானது தண்ணீர் உணவுகள் இன்றி தவித்து பலர் சோர்வடைந்து மயக்கநிலை அடைந்தார்கள்.
தண்ணீர் கூட இல்லாமல் இருந்த நிலையில் தான் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன அப்படி வழங்கும்போது கூட கூட்டத்தினர் அந்த தண்ணீர் பாட்டிலை வாங்க முண்டி அடித்தனர் என அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இறுதியாக நீதிபதிகள் கூறுகையில், வழக்கில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. அதன் அடிப்படையில் அரசு தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் பிற மனுதாரர்கள் எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யவும் அனுமதி அளித்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
ஃபுல் எனர்ஜியுடன் மிரட்டும் ஹரிஷ் கல்யாண்…. ‘டீசல்’ பட டிரைலர் வெளியீடு!