சூர்யா நடிக்கும் கருப்பு படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
சூர்யாவின் 45வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் ‘கருப்பு’. இந்த படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. சாய் அபியங்கர் இந்த படத்தின் இசையமைப்பாளராகவும் ஜி.கே. விஷ்ணு இதன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி வருகின்றனர். இப்படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடிக்க அவருடன் இணைந்து திரிஷா, நட்டி நட்ராஜ், யோகி பாபு, சுவாசிகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சூர்யாவின் ‘கங்குவா’, ‘ரெட்ரோ’ ஆகிய படங்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே சூர்யா ரசிகர்கள் பலரும் அடுத்ததாக ‘கருப்பு’ திரைப்படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அதே சமயம் இந்த படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், இதுவரை ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. இது ரசிகர்களுக்கு சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அடுத்த ஆண்டு பொங்கல் ரேஸில் இப்படம் இணைய வாய்ப்புள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு 2025 அக்டோபர் மாதத்திற்கு முன்னதாக அதாவது இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘கருப்பு’ படத்தின் ரிலீஸ் தேதியை சர்ப்ரைஸாக வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது. எனவே இந்த தகவல் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


