spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரூ.100 கோடி வசூலை தாண்டுமா சிவகார்த்திகேயனின் 'மதராஸி'?

ரூ.100 கோடி வசூலை தாண்டுமா சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’?

-

- Advertisement -

சிவகார்த்திகேயனின் மதராஸி பட வசூல் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.ரூ.100 கோடி வசூலை தாண்டுமா சிவகார்த்திகேயனின் 'மதராஸி'?

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் ‘மதராஸி’. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார். ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைத்திருந்தார். காதல் கலந்த ஆக்ஷன் படமாக வெளியான இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், வித்யூத் ஜம்வால், விக்ராந்த், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் முழுக்க முழுக்க ஆக்சன் ஹீரோவாக மிரட்டி இருந்தார். ஏ.ஆர். முருகதாஸ் நீண்ட இடைவெளிக்கு பிறகு துப்பாக்கி, கத்தி பட ஸ்டைலை கையில் எடுத்திருந்தார். அடுத்தது சிவகார்த்திகேயன் மற்றும் ருக்மினியின் காதல் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவ்வாறு இந்த படத்தில் பல ப்ளஸ் பாயிண்ட்கள் இருந்தாலும் திரைக்கதை இன்னும் வலுவாக இல்லாதது படத்தின் மைனஸாக அமைந்தது. எனவே இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.ரூ.100 கோடி வசூலை தாண்டுமா சிவகார்த்திகேயனின் 'மதராஸி'? அதே சமயம் இந்த படம் தற்போது வரை உலக அளவில் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக அமைந்த ‘அமரன்’ திரைப்படம் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலை வாரிக் குவித்து மிகப்பெரிய சாதனை படைத்தது. ஆகையினால் அதைத் தொடர்ந்து வெளியான ‘மதராஸி’ திரைப்படம் ரூ.300 கோடியை விட அதிகமாக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய தகவலின் படி இந்த படம் ரூ.100 கோடியை தாண்டுமா? என்பதே மிகப்பெரிய சந்தேகமாக இருக்கிறது. இருப்பினும் இனிவரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ