spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்நிதி மசோதா தோல்வி…ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் ‘ஷட் டவுன்’...

நிதி மசோதா தோல்வி…ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் ‘ஷட் டவுன்’…

-

- Advertisement -

அமெரிக்காவில் நிதி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறாததால், ஆறு ஆண்டுகளில் முதன்முறையாக அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. இதன் விளைவாக, இலட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பு அல்லது பணிநீக்கம் செய்யப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.நிதி மசோதா தோல்வி…ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் ‘ஷட் டவுன்’...

அமெரிக்காவில் அரசின் செலவீனங்களை மேற்கொள்ள நாடாளுமன்றத்தின் அனுமதி அவசியம். இதற்காக, நிதி மசோதாவுக்கு செனட் உறுப்பினர்களில் குறைந்தது 60 சதவீதம் பேரின் ஒப்புதல் தேவைப்படுகிறது. சமீபத்திய வாக்கெடுப்பில் குடியரசுக் கட்சியினர் 53 சதவீதமும், ஜனநாயகக் கட்சியினர் 47 சதவீதமும் ஆதரவாக வாக்களித்தனர். ஆனால் தேவைப்படும் 60 சதவீதத்தை எட்டாததால், அமெரிக்க அரசு புதன்கிழமை நள்ளிரவு முதல் முறையாக ‘ஷட் டவுன்’ அறிவித்தது.

we-r-hiring

அரசாங்க முடக்கம் குறித்து வெள்ளை மாளிகை சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில், “Democratic Shutdown” எனக் குறிப்பிட்டது. இதற்கு பதிலளித்த செனட் ஜனநாயகக் கட்சித் தலைவர் சக் ஷுமர், “குடியரசுக் கட்சியினர் மருத்துவத் திட்ட நிதி மற்றும் பிற முக்கிய முன்னுரிமைகளை தடுக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் ஜனநாயகர்களை அரசியல் ரீதியாக துன்புறுத்துகிறார்கள்” என குற்றம் சாட்டினார்.

அரசு முடக்கம் ஏற்பட்டாலும், விமான சேவை, அறிவியல் ஆராய்ச்சி, ராணுவம் போன்ற அத்தியாவசிய பணிகள் தொடரும். எனினும், அந்த துறைகளின் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது. அத்தியாவசியமற்ற துறைகளில் பணிபுரியும் சுமார் 7,50,000 அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படவோ அல்லது பணிநீக்கம் செய்யப்படவோ உள்ளனர். இத்தகைய ஊழியர்களுக்காக தினசரி 400 மில்லியன் அமெரிக்க டாலர் செலவாகிறது.

நிதி மசோதா வாக்கெடுப்புக்கு முன்னர் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “நாங்கள் நிறைய பேரை பணிநீக்கம் செய்யப் போகிறோம்; அவர்கள் ஜனநாயகக் கட்சியினராக இருக்கக் கூடும்” என்று எச்சரித்தார்.

அமெரிக்காவில் அரசின் செலவீனங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் நிறைவேறாதபோது, அரசு நிர்வாகம் தற்காலிகமாக முடங்குவது வழக்கம். 2013 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளிலும் இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன. தற்போதைய முடக்கம், அரசியல் கட்சிகளுக்கிடையேயான முரண்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தி, ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களின் வாழ்க்கையை சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது.

எண்ணூர் BHEL விபத்து…உயிரிழந்த 9 பேரின் உடலை நேரில் பார்வையிட்ட அமைச்சர் சிவசங்கர்…

MUST READ