காந்தாரா சாப்டர் 1 படத்தின் இரண்டு நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
கன்னட சினிமாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு ‘காந்தாரா’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தெய்வ நம்பிக்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் தொழில்நுட்ப காரணங்களால் ரசிகர்களைக் கவர்ந்து அதிக வசூலை அள்ளியது. இதைத்தொடர்ந்து ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வந்த நிலையில் இப்படம் கடந்த (அக்டோபர் 2) பல்வேறு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது. ‘காந்தாரா’ படத்தை போல் ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தையும் ரிஷப் ஷெட்டி தானே இயக்கி, நடித்திருந்தார். ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அஜினிஸ் லோக்நாத் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மேக்கிங், விஎஃப்எக்ஸ், கிளைமாக்ஸ் ஆகியவற்றை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ரிஷப் ஷெட்டி, ருக்மினி வசந்தின் நடிப்பும் பெரிய அளவில் பேசப்படுகிறது. மேலும் இந்த படமானது வெளியான முதல் நாளில் உலக அளவில் ரூ.89 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இரண்டு நாட்களில் இப்படம் ரூ.105 கோடி வரை வசூல் செய்துள்ளதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இனிவரும் நாட்களில் இந்த படம் அதிக வசூலை வாரி குவிக்கும் என்றும் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.