spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஷால் - சுந்தர். சி படத்தின் கதாநாயகி இவரா?.... வெளியான புதிய தகவல்!

விஷால் – சுந்தர். சி படத்தின் கதாநாயகி இவரா?…. வெளியான புதிய தகவல்!

-

- Advertisement -

விஷால் – சுந்தர். சி படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.விஷால் - சுந்தர். சி படத்தின் கதாநாயகி இவரா?.... வெளியான புதிய தகவல்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவர் தற்போது ரவி அரசு இயக்கத்தில் ‘மகுடம்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து விஷால், மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்க உள்ளார் என பேச்சு அடிபடுகிறது. ஏற்கனவே விஷால், சுந்தர். சி இயக்கத்தில் ஆம்பள, ஆக்சன், மதகஜராஜா ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அதில் கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘மதகஜராஜா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. எனவே அடுத்தபடியாக இவர்கள் இணைய உள்ள திரைப்படமும் நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் உருவாக இருப்பதாகவும் இதன் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. விஷால் - சுந்தர். சி படத்தின் கதாநாயகி இவரா?.... வெளியான புதிய தகவல்!இது தவிர அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகளை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். அதில் ஒருவர் கயடு லோஹர் என்றும் மற்றொருவர் தெலுங்கு நடிகையாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இனிவரும் நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ