spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரையார் முதலமைச்சர் வேட்பாளர்? ஆதவ் அர்ஜுனா டெல்லியில் பேரம்! விஜய்க்கு காத்திருக்கும் அதிர்ச்சி! செந்தில் வேல்...

யார் முதலமைச்சர் வேட்பாளர்? ஆதவ் அர்ஜுனா டெல்லியில் பேரம்! விஜய்க்கு காத்திருக்கும் அதிர்ச்சி! செந்தில் வேல் நேர்காணல்!

-

- Advertisement -

கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை வழங்கப்பட்டதன் மூலம் பாஜகவிடம் விஜய் முற்று முழுவதுமாக சரணடைந்து விட்டதாக பத்திரிகையாளர் செந்தில் வேல் குற்றம்சாட்டியுள்ளார்.

senthilvel new
senthilvel new

கரூர் கூட்டநெரிசல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது தொடர்பாக ஊடகவியலாளர் செந்தில்வேல் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- கரூர் விவகாரம் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டிருப்பது உண்மையில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றியாகும். தோல்வி என்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கானதாகும். இந்த வழக்கில் பின்னடைவு ஏற்பட்டிருப்பது நடிகர் விஜய்க்கு தான். பாஜக கவுன்சிலரான உமா ஆனந்த், பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணியன் ஆகியோர் தான் இந்த விவகாரத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

we-r-hiring

அஜித் குமார் மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுகிறபோது, விஜய் சிபிஐ என்பது ஆர்எஸ்எஸ் – பாஜகவினுடைய கைப்பாவை, சிபிஐ விசாரணை கோருவது மாநில சுயாட்சிக்கு எதிரானது என்று விமர்சித்தார். அந்த விமர்சனம் இந்த விவகாரத்தில் பொருந்துமா? இல்லையா? கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தரப்பில் சிபிஐ விசாரணை கேட்கவில்லை என்று சொல்கிறார்கள். மற்றவர்கள் தரப்பில் சிபிஐ விசாரணை கேட்கிறபோது, மாநில சுயாட்சிக்கு எதிரான சிபிஐ விசாரணை வேண்டாம் என்று தவெக தரப்பில் மறுப்பு தெரிவிக்காதது ஏன்?

கரூர் விவகாரம்: தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு மீது நம்பிக்கையில்லை" - த.வெ.க.

தவெக எதற்காக தமிழக அரசின் விசாரணை வேண்டாம் என்று சொல்கிறார்கள். விஜயின் அரசியல் எதிரியான திமுக அரசின் கீழ் உள்ள காவல்துறையால் விசாரணை முறையாக நடைபெறாது என்பதால் அவர்கள் எதிர்க்கிறார்கள். சரி சிபிஐ என்பது உங்களுடைய கொள்கை எதிரியான பாஜகவின் வசம் உள்ளது. சிபிஐ விசாரணைக்கு இந்த வழக்கு சென்றால், அவர்கள் உங்களை முடக்க மாட்டார்களா? அப்போது ஏன் நீங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?

தமிழ்நாட்டிலேயே விசாரணை நடக்கக்கூடாது என்பதற்காக தான் அவர்கள் டெல்லிக்கு ஓடினார்கள். தமிழக காவல்துறை விசாரணை வேண்டாம் என்று தவெகவினர் உச்ச நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள் என்றால் நீதிமன்றமே தாமாக சிபிஐ வசம் தான் வழக்கை ஒப்படைப்பார்கள். அப்போது சிபிஐ விசாரணை கேட்கவில்லை என்று யாரை இவர்கள் ஏமாற்றுகிறார்கள். சிபிஐ விசாரிப்பதால், விஜய் நீதி வெல்லும் என்று பதிவிடுகிறார். அப்போது ஏன் முன்பு சிபிஐ விசாரித்தால் பல ஆண்டுகள் கால தாமதம் ஆகும் என்று விஜய் சொன்னார்.

கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியிருப்பது இடைக்கால உத்தரவுதான். அப்படி இடைக்கால உத்தரவு என்கிறபோது அவ்வளவு சீக்கிரமாக வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று சட்ட நிபுணர்கள் சொல்கிறார்கள். சரி சிபிஐ விசாரித்த குட்கா முறைகேடு வழக்கு என்ன ஆனது? கண்டெய்ணரில் பல கோடி பிடிபட்ட வழக்கு இன்னும் விசாரிக்கவில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சிபிஐ விசாரித்தபோது, அருணா ஜெகதீசன் ஆணையமும் விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் அருணா ஜெகதீசன் ஆணையத்தை வேண்டாம் என்றது ஏன்? அருணா ஜெகதீசன் ஆணையம் என்பது கூட்டநெரிசல் ஏற்படாமல் இருக்க அரசுக்கு தெளிவு ஏற்படுவதற்கான அறிக்கையாகும்.

அன்புமணி, டிடிவி தினகரன் போன்றவர்கள் மீதான வழக்குகள் காரணமாக பாஜக கூட்டணியில் இணைந்தனர். தற்போது இந்த கூட்டணியில் புதிதாக விஜய் ஏறி இருக்கிறார். பாஜகவின் பிடிக்குள் மொத்தமாக விஜயை கொண்டுவந்து விட்டார்கள். விஜய், அதிமுக – பாஜக கூட்டணிக்கு செல்கிறபோது யார் முதலமைச்சர் என்கிற கேள்வி எழலாம். ஏன் அந்த முதலமைச்சர் வேட்பாளர் நிர்மலா சீதாராமனாக இருக்கக்கூடாது.  ஏன் அண்ணாமலையாக இருக்கக்கூடாது? பாஜக எடப்பாடியையும், விஜயையும் முதலமைச்சர் ஆக்கவா இவ்வளவு ரிஸ்க்குகளை எடுக்கிறது? அவர்கள் சொல்லிவிட்டால் நீங்கள் மீறி விடுவீர்களா?

கரூர் தொகுதியின் எம்எல்ஏ ஆன செந்தில் பாலாஜி மருத்துவமனைக்கு ஓடி வந்தது ஏன்? என்று கேட்கிற கூட்டத்தால், மருத்துவர்கள் எப்படி மிக வேகமாக வந்தார்கள் என்று கேட்கத் தெரிந்த இந்த கூட்டத்தால்? எழுதப் படிக்க தெரியாத ஒருவர், சிபிஐ விசாரணை கேட்டு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றிருப்பாரா? என்று ஏன் கேட்க தெரியவில்லை. அதுவும் அந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஒரு விசாரணைக்கே பல லட்சம் ரூபாய் வாங்கும் நிலையில், அவர்களை தேடிப் போய் சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்காட முடியுமா? 41 பேர் இறந்த பிறகும் அதை பயன்படுத்தி அரசியல் செய்கிறார்கள். வேலை வாங்கித் தருகிறேன் என்று கையெழுத்து வாங்கிக் கொண்டு போய், சிபிஐ விசாரணை கோரி வழக்கு தொடர்கிறார்கள். ஒரு பெண்ணின் மகன் இறந்துள்ளார். ஒரு நபரின் மனைவி இறந்துள்ளார். இவர்கள் இருவரது பெயரிலும் போலியாக மனுவை தாக்கல் செய்கிறார்கள்.

மோடி - அமித்ஷா

குறைந்தபட்சம் தவெக தரப்பில் இருந்து இறந்துபோன வீட்டில் அதிமுகவினர் இதுபோன்ற செயலை செய்திருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். அப்படி செய்திருந்தால் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதிமுகவின் இந்த அரசியலை நாங்கள் கண்டிக்கிறோம் என்று தவெக ஒருபோதும் சொல்லாது. அப்போது நீங்கள் பாஜகவிடம் முற்று முழுவதுமாக சரணடைந்து விட்டார்கள். உங்களை கூட்டணிக்குள் வைப்பதா? அல்லது வெளியில் வைப்பதா? என்று திட்டம் போட்டு பாஜக உங்களிடம் சொல்லும். அவர்கள் சொல்கிறபடி எல்லாம் நீங்கள் ஆடப் போகிறீர்கள். பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ