spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமக்களே மகிழ்ச்சி செய்தி..!! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,680 குறைந்த தங்கம் விலை..!!

மக்களே மகிழ்ச்சி செய்தி..!! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,680 குறைந்த தங்கம் விலை..!!

-

- Advertisement -

தங்கம் விலை

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை காலையில் ரூ.2,400 குறைந்த நிலையில், தற்போது சவரனுக்கு மேலும் ரூ.1,280 குறைந்துள்ளது.

தங்கம் விலை அண்மைக்காலமாக அதிரடியான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதிலும் கடந்த 7ம் தேதி ஒரு சவரன் ஆபரணத்தங்ஜம் அதிரடியாக ரூ.90 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு ஒவ்வொரு நாளும் காலை, மாலை என இருவேளைகளிலும் ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கம் விலை, கடந்த 17ம் தேதி சவரன் ரூ.97 ஆயிரம் என்னும் புதிய உச்சத்தை தொட்டது.

we-r-hiring

அதன்பிறகு சர்வதேச அளவில் தங்கம் மற்றும் வெள்ளி பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. அதாவது தங்கம் 6.3% வரை சரிந்து, ஒரு அவுன்ஸ் டாலருக்கு $4.082 – $4.143 வரை வர்த்தகம் ஆனது. இது ஜூன் 2013க்குப் பிறகு ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய சதவீத வீழ்ச்சியாகும். இதேபோல் ஏற்கனவே சரிந்து கொண்டிருக்கும் வெள்ளி மேலும் 8.7% சரிந்து, ஒரு அவுன்ஸ் சுமார் $47.89 – $48.40 என்கிற நிலையை அடைந்துள்ளது. இது பிப்ரவரி 2021க்குப் பிறகு மிகப்பெரிய வீழ்ச்சியாக பார்க்கப்படுகிறது.

சர்வதேச அளவில் நிகழும் இந்த அதிரடி சரிவினால் இந்தியாவிலும் தங்கம் விலை இறங்கு முகத்தை காட்டியுள்ளது. அதாவது இன்று காலை தங்கம் அதிரடியாக சவரனுக்கு ரூ.2,400 சரிந்துள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 அதிகரிப்பு!

அதன்படி இன்று(அக்.22) , சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 குறைந்து, ஒரு சவரன் ரூ. 93,600க்கும், கிராமுக்கு ரூ.300 குறைந்து ஒரு கிராம் ரூ.11,700க்கு விற்கப்பட்டது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.180க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,80,000க்கு விற்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு மேலும், ரூ.1,280 குறைந்து ஒரு சவரன் ரூ.92,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கிராமுக்கு ரூ.160 குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.11,540க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,680 குறைந்துள்ளது நகைப்பிரியர்கள், இல்லத்தரசிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இதேபோல் வெள்ளி விலை அதிரடியாக கிராமுக்கு ரூ. 5 குறைந்து, சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.175க்கு விற்பனையாகிறது.

MUST READ