சியான் 63 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
விக்ரம் நடிப்பில் கடைசியாக ‘வீர தீர சூரன்’ திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தின் மேக்கிங் பலராலும் பாராட்டப்பட்டாலும் இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதன் பிறகு நடிகர் விக்ரம், தனது 63வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. அதன்படி சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை மண்டேலா, மாவீரன் ஆகிய படங்களின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த படமானது அடுத்த கட்டத்திற்கு நகரவே இல்லை. இந்நிலையில் சமீப காலமாக இந்த படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டு இருப்பதாகவும் மடோன் அஸ்வினுக்கு பதிலாக புதுமுக இயக்குனர் ஒருவர் இந்த படத்தை இயக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த வாரம் அதாவது வருகின்ற அக்டோபர் 30ஆம் தேதி இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். அடுத்தது நடிகை மீனாட்சி சௌத்ரி இப்படத்தின் கதாநாயகியாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருப்பதாகவும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
- Advertisement -


