spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநான் என்றுமே விஜய்க்கு நல்லது தான் நினைத்திருக்கிறேன்.... நடிகர் அஜித்!

நான் என்றுமே விஜய்க்கு நல்லது தான் நினைத்திருக்கிறேன்…. நடிகர் அஜித்!

-

- Advertisement -

கடந்த செப்டம்பர் மாதம் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கரூரில் நடத்தப்பட்ட பரப்புரையின்போது 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.நான் என்றுமே விஜய்க்கு நல்லது தான் நினைத்திருக்கிறேன்.... நடிகர் அஜித்! இந்த விவகாரத்தில் சிலர் விஜய்க்கு ஆதரவாகவும், சிலர் விஜய்க்கு எதிராகவும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அந்த வகையில் பிரபல நடிகர் அஜித் இந்த சம்பவம் குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில், “கரூர் கூட்ட நெரிசலுக்கு தனிநபர் மட்டும் பொறுப்பாக முடியாது. நாம் எல்லாருமே பொறுப்பு. ஒரு பெரிய கூட்டத்தைக் கூட்டி நாம் யார் என்பதை காட்டக்கூடிய சமுதாயமாக மாறிவிட்டோம். இது முடிவுக்கு வரவேண்டும். கிரிக்கெட் மைதானத்திலும் அதிக கூட்டம் கூடுகிறது. ஆனால் அங்கு இதுபோன்று நடக்கவில்லை. சினிமா பிரபலங்களுக்கு தான் இப்படி நடக்கிறது” என்று கூறியிருந்தார். அஜித்தின் இந்த கருத்து விஜய்க்கு ஆதரவாக இருக்கிறது என சிலர் கூறிவர, இன்னும் சிலர் இந்த கருத்து விஜய்க்கு எதிராக இருக்கிறது என்று கூறி வருகின்றனர். நான் என்றுமே விஜய்க்கு நல்லது தான் நினைத்திருக்கிறேன்.... நடிகர் அஜித்!இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் அஜித் தனது விளக்கத்தை கொடுத்துள்ளார். அதன்படி அவர், “கரூர் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இது மாதிரி இதற்கு முன்பாக ஆந்திரா சினிமா திரையரங்கில், பெங்களூரு கிரிக்கெட் மைதானத்தில் நடந்திருக்கிறது. பல நாடுகளிலும் நடந்திருக்கிறது. பொதுவெளியில் எப்படி நடக்க வேண்டும் என்ற விதிமுறைகள் அனைவருக்கும் பொருந்தும். என்னுடைய இந்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்படாது என்று நம்புகிறேன். எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சி செய்பவர்கள் அமைதியாக இருப்பது நல்லது. நான் என்றுமே விஜய்க்கு நல்லது தான் நினைத்திருக்கிறேன். அவரை வாழ்த்தியும் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ