spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைமோடி - எடப்பாடி சந்திப்பு! ஒரு முக்கிய ட்விஸ்ட் இருக்கு! அய்யநாதன் நேர்காணல்!

மோடி – எடப்பாடி சந்திப்பு! ஒரு முக்கிய ட்விஸ்ட் இருக்கு! அய்யநாதன் நேர்காணல்!

-

- Advertisement -

விஜய், அதிமுக – பாஜக கூட்டணியில் இணைகிற முடிவில் இருப்பதாகவும், தவெகவுக்கு 20 தொகுதிகள் வரை வழங்க திட்டமிட்டு உள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- பிரதமர் மோடி தேர்தலை குறித்து வைத்து தான் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். அவர்களுக்கு இரண்டு நோக்கங்கள் தான் இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற வேண்டும். பின்னர் அதை கார்ப்பரேட்களுக்கு கொடுக்க வேண்டும். உண்மையிலேயே விவசாயிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றால் டெல்லியில் போராடிய விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த வேண்டும். ஆனால் மத்திய அரசு செய்யவில்லை. தமிழ்நாட்டில் செந்தில் பாலாஜியை தூக்கி 400 நாட்கள் சிறையில் வைத்தார்கள். ரூ.1.62 கோடி பெற்றுக்கொண்டு பணத்திற்கு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் 41 ஆயிரம் கோடி கடன் வாங்கி அனில் அம்பானி மோசடி செய்துவிட்டார். ஆனால் அவர் சுதந்திரமாக வெளியில் சுற்றிக் கொண்டிருக்கிறார். காரணம் கார்பரேட் நிறுவன முதலாளிகளுக்காக தான் மோடி அரசு வேலை செய்கிறது. தமிழக விவசாயிகளுக்கு மோடி அரசு என்ன செய்தது? பாஜக கூப்பிட்டால், அவர்களும் ஆட்டு மந்தை போன்று செல்கிறார்கள். டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்தனர். நீங்கள் அதில் பங்கேற்கவில்லையா? குறைந்தபட்ச ஆதார விலை, கடன் தள்ளுபடி உங்களுக்கு வேண்டாமா? 

அதிமுக – பாஜக கூட்டணி வலிமையாகவே உள்ளது. பாஜகவினருக்கு, தாங்கள் எந்த எந்த தொகுதிகளில் போட்டியிட போகிறோம் என்கிற விவரம் தெரிந்தால், அங்கு முன்கூட்டியே வாக்கு சேரிக்க வசதியாக இருக்கும் என நினைக்கிறார்கள். அதனால் தொகுதி பங்கீட்டை முன்னதாகவே முடிக்குமாறு மோடி சொல்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி பின்னால் கொடுத்தால் இடங்களை குறைக்கலாம் என நினைக்கிறார். இன்று பிரதமர் வருகையின்போது தொகுதி பங்கீடு குறித்து பேசி முடித்துவிடுவார்கள்.  பீகாரில் அனைத்துக்கட்சிகளையும் ஒருங்கிணைத்து தேர்தலில் போட்டியிட்டது போல, தமிழ்நாட்டிலும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க முயற்சி செய்வார்கள். அவர்கள் விஜய் உள்ளிட்ட அனைவரையும் குறிவைத்து செயல்படுகிறார்கள். அதன் காரணமாகவே விஜய், கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுப்பது தொடர்பாக தீர்மானம் போட்டு வைத்துள்ளார்.

பாஜகவின் இலக்கு என்பது தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் அதிக இடங்களை பிடிக்க வேண்டும். குறைந்தபட்சம் 30 பேரை சட்டமன்றத்திற்குள் அனுப்ப வேண்டும் என்பதாகும். அதற்காக அவர்கள் 40 முதல் 50 தொகுதிகளில் போட்டியிட வேண்டும். அனேகமாக 41 முதல் 42 இடங்களை பாஜகவுக்கும், கூட்டணி கட்சிகளுக்கு வழங்க கூடுதலாக 20 சீட்டுகளையும் கேட்கிறார்கள். ஒட்டுமொத்தமாக 60 இடங்கள் தருவார். காரணம் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு கடைசி நேரத்தில் வரப்போகிற விஜய்க்காக 20 இடங்களை ஒதுக்கி வைத்திருக்கிறார். 80 தொகுதிகள் போனாலும் எஞ்சிய 150 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும்.

ஓபிஎஸ், தினகரன் போன்றவர்கள் மீண்டும் என்டிஏ கூட்டணிக்குள் வருவார்கள். தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்கும் முயற்சிகளில் அமித்ஷா மிகவும் கூர்மையாக இருக்கிறார். ஆனால் அதற்கான வாய்ப்புகள் இங்கே இல்லை என்று அவர் முடிவு செய்துவிட்டார். தற்போது அவருக்கு 30 இடங்கள் வந்தால் போதும். எனவே விஜய், ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன், சசிகலா போன்றவர்கள் சேர்ந்து ஒரு அணி. இவர்கள் 30 இடங்களில் வென்றாலும் 60 இடங்கள் வந்துவிடும். எடப்பாடி பழனிசாமிக்கு  அவர்கள் உதவப் போவது கிடையாது. அவர் எவ்வளவு இடங்களில் வருகிறாரோ அது வந்துவிட்டு போகட்டும். அவர்களின் குறி 2029 மக்களவை தேர்தல். பீகாரில் செய்ததை தமிழ்நாட்டில் வேறு மாதிரி செய்வார்கள். அவர்கள் வெற்றி பெறும் விதமாக மாற்றிக் கொள்வார்கள். அதிமுகவை விட அதிக இடங்களில் வென்று கூட்டணியில் முதன்மையான கட்சியாக வரப் பார்ப்பார்கள். எனவே எடப்பாடி தலைமையில் ஒரு அணி, விஜய் தலைமையில் ஒரு அணி என்றுதான் முடியும்.

பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பைஜயந்த் பாண்டா, தேமுதிக, பாமக போன்ற கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார்.  பாண்டாவின் நோக்கம் என்பது என்.டி.ஏ கூட்டணியை பலப்படுத்துவதாகும். அவர்கள் செய்கிற நடவடிக்கை எல்லாம் 2029 மக்களவை தேர்தலுக்காக தான். எடப்பாடி உடன் இருந்தால் அதிமுகவின் வாக்கு தங்களுக்கு பலன் அளிக்கும் என்று நினைக்கிறார்கள். அன்புமணி, பாஜக கூட்டணிக்கு தன்னை எழுதி கொடுத்துவிட்டார். ராமதாஸ், அதிமுக உடன் செல்வார். அப்படி முடியாவிட்டால் விஜயுடன் கூட்டணிக்கு செல்வார். அப்போது ஒபிஎஸ்,டிடிவி போன்றவர்களுடன் ராமதாஸ் பயணிப்பார். ஆனால் விஜயின் கணக்கு இவர்கள் கிடையாது. அவர் பாஜக உடன் கூட்டணி செல்வதற்காக தான் தீர்மானம் போட்டார். பாஜக தான் அவரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. எனவே விஜய் அங்கே தான் செல்வார்.

ராகுல்காந்தி, விஜய் கூட்டணி தொடர்பாக பேசியதற்கு வாய்ப்புகள் உள்ளன. இங்குள்ள காங்கிரஸ் கட்சியினர் சொன்னதை நம்பி, காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைக்கலாம் என்று நினைக்கிறார்கள. இதுபோல பல முறை டெல்லி தலைமை ஏமாந்துள்ளது. இம்முறை ஏமாறுகிறார்காளா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். அப்படி காங்கிரஸ், விஜயுடன் கூட்டணிக்கு செல்வது திமுகவுக்கு நல்லது. அவர்கள் விஜயுடன் செல்கிறபோது ராமதாசும் உடன் வருவார். ஆனால் அவர்களால் தேர்தலில் ஒன்றும் சாதிக்க முடியாது. ஆனால் திமுக இவர்களுக்கு வழங்கும் சீட்டுகளை மற்ற கட்சிகளுக்கு தரலாம். இருந்தபோதும் ராகுல்காந்தி திமுகவை விட்டு போக மாட்டார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ