spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரஜினி, கமலிடம் கதை சொன்னது உண்மையா?.... 'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குனரின் பதில்!

ரஜினி, கமலிடம் கதை சொன்னது உண்மையா?…. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குனரின் பதில்!

-

- Advertisement -

டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் சமீபத்தில் பேட்டி கொடுத்துள்ளார்.ரஜினி, கமலிடம் கதை சொன்னது உண்மையா?.... 'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குனரின் பதில்!

கடந்த மே மாதம் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ எனும் திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினரிடைய பாராட்டுகளை பெற்றது. இதைத்தொடர்ந்து அபிஷன் ஜவிந்த் என்ன படம் இயக்குவார்? என்று எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஆனால் அபிஷன் தற்போது ‘வித் லவ்’ எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ரஜினி, கமலிடம் கதை சொன்னது உண்மையா?.... 'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குனரின் பதில்!இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் அபிஷன் ஜீவிந்திடம், உங்களுடைய அடுத்த ஸ்கிரிப்டை நீங்கள் ரஜினி, கமல், சூர்யா ஆகியோரிடம் சொன்னதாக ஒரு தகவல் பரவி வருவது உண்மையா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அபிஷன், சிரித்தபடி தற்போது தன்னுடைய அடுத்த ஸ்கிரிப்ட்டை எழுதி வருவதாகவும் சரியான நேரம் வரும்போது அதை அறிவிப்பேன் எனவும் கூறியுள்ளார். டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்கு பிறகு அபிஷன் ஜீவிந்தின் அடுத்த படமும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

we-r-hiring

தலைவர் 173 படத்தில் இருந்து சுந்தர்.சி விலகிய பிறகு ரஜினி பல இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக பேச்சு அடிபடுகிறது. எனவே ‘தலைவர் 173’ படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்தாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

MUST READ