இராமநாதபுரம் வடக்கு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 
இராமநாதபுரம் வடக்கு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரி ஆலயத்தில் அஷ்ட பந்தனமகா கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு கடந்த 29ஆம் தேதி சனிக்கிழமை கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் வாஸ்து சாஸ்தி பூஜைகள் யாக சாலை வேத விற்பனர்கள் வேத மந்திரம் முழங்கு பூஜைகள் தீபாராதனை நடைபெற்றது. இன்று காலை சரியாக ஒன்பது முப்பது மணி முதல் 10.45க்குள் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்கு புனித நீர் குடத்தை சுமந்து யாகசாலை சுற்றி வந்து கோயில் கும்பத்தில் புனித நீரானது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகத்தை நிறைவு செய்தனர்.

இந்த புனித தருணத்தை காண ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு திரண்டு, அம்மனின் அருள் ஆசீர்வாதத்தை பெற்றுச் சென்றனர். ஆன்மீக பெரியோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மகா அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டதால் கோயில் வளாகம் பண்டிகை சூழ்நிலையை ஒத்திருந்தது.


