ரசிகர்களுக்கு இடையே நடந்த சண்டை விபரீதத்தில் முடிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரிய நடிகர்களின் ரசிகர்கள் ஒருவரை ஒருவர் மோதிக்கொள்வது புதிதல்ல. சமூக வலைதளங்களில் பெரிய ஸ்டார் நடிகர்கள் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் கேவலமாக வசைப்பாடி மீம்ஸ் வெளியிட்டு தங்களது வெறுப்பை மற்ற நடிகரின் மீது காண்பித்து வருகின்றனர். சில சமயங்களில் இது அளவு கடந்து கூட செல்லும். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறியுள்ளது.

தீவிர பிரபாஸ் ரகசியர் மற்றும் பவன் கல்யாண் ரசிகரை இடையே நடந்த சிறிய சண்டை தற்போது பெரிய அளவில் வெடித்துள்ளது.
கிஷோர் மற்றும் ஹரிகுமார் ஆகிய இரு தொழிலாளர்கள் வீட்டில் பெயின்டிங் வேலைக்காக அத்திலி என்ற ஊருக்கு சென்றுள்ளனர். வேலை முடிந்து இரவு தங்கியிருந்த அவர்கள், தங்களுக்குப் பிடித்த நடிகர்களைப் பற்றி அவர்களுக்குள் வாக்குவாதம் தொடங்கினர்.
கிஷோர் தனது மொபைலில் பவன் கல்யாண் குறித்து ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். அதைப் பார்த்து கடுப்பான ஹரிகுமார் அதை நீக்கிவிட்டு பிரபாஸ் பற்றி ஸ்டேட்டஸ் வைக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
அதற்கு கிஷோர் மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாத ஹரிகுமார், கிஷோர் குமாரின் தலை மற்றும் முகத்தில் சென்ட்ரிங் பைப்பால் தாக்கியுள்ளார். காயம் காரணமாக கிஷோர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து ஹரி குமார் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிகுமாரை தேடி வருகின்றனர்.


