Homeசெய்திகள்கட்டுரைதிமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும்! விஜயின் டெப்பாசிட் காலி! அய்யநாதன் நேர்காணல்!

திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும்! விஜயின் டெப்பாசிட் காலி! அய்யநாதன் நேர்காணல்!

-

- Advertisement -

பாஜக தமிழ்நாட்டில் சித்தாந்த ரீதியாக கால்பதிக்க முடியாது. அதேவேளையில் அவர்களால் தொழில்நுட்ப ரீதியாக தமிழகத்தில் கால்பதிக்கும் வாய்ப்புகள் உள்ளன என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

we-r-hiring

திருவண்ணாமலையில் நடந்த திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- தமிழ்நாட்டின் நலன், தமிழ் மக்களின் நலன் மற்றும் தமிழின் மேன்மை ஆகிய மூன்றையும் காப்பாற்ற வேண்டும் என்றால், அதன் ஒரே எதிரியான பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் வீழத்த வேண்டும். அவர்களுடன் இருப்பவர்களை வீழ்த்த வேண்டும். பாஜக தமிழ்நாட்டிற்கு வருவது என்பது ஒரு பண்பாட்டு படையெடுப்பு.

அரசியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்துகிற மனப்பாங்கோடு அவர்கள் வருகிறார்கள். அதை நாம் முறியடிக்க வேண்டும். அதற்கு திமுக முன்னால் நிற்கும் என்று திருவண்ணாமலையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார். அவருடைய பேச்சில் அதுதான் மிகவும் முக்கியமான விஷயமாக நான் பார்க்கிறேன். சட்டப்பேரவை தேர்தலுக்கு ஏன் பாஜகவை எதிரியாக்குகிறீர்கள்? பாஜகவால் இங்கே ஒரு தொகுதி கூட வெல்ல முடியாதபோது, அவர்களை எதிரியாக்குவது ஏன்? என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். பாஜக என்பது ஒரு தேர்தல் எந்திரம். தேர்தலில் வெல்வது, அதிகாரத்தை கைப்பற்றுவது தான் அவர்களுடைய நோக்கம்.

ஆர்.எஸ்.எஸ். – பாஜகவுக்கு மக்களை தங்கள் பக்கம் வைத்துக்கொள்வதற்கு இந்துத்துவா தேவைப்படுகிறது. பாஜகவின் 11 வருட ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன? ஆனால் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் தான் சாதித்துள்ளன. ஆனால் மக்களுக்கு நன்மை செய்வது போல, ஊடகங்களை வைத்து பிம்ப அரசியலை செய்கிறார்கள். தமிழ், தமிழர், தமிழ்நாடு ஆகிய மூன்றை தான் ஆர்.எஸ்.எஸ் எதிரியாக பார்க்கிறது. இதை உடைத்துவிட்டால் அவர்கள் எங்கு வேண்டுமானாலும் வந்துவிடலாம். எது வேண்டுமானாலும் செய்யலாம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், உதயநிதியும், பாஜக படை கொண்டுவந்தாலும் எதிர்த்து நிற்போம் என்று சொல்கிறார்கள். இருந்தபோதும் அவர்களுடைய வழிமுறை மிகவும் நுணுக்கமான தொழில்நுட்ப ரீதியான களவாணித்தனமாகும். கர்நாடக மாநிலம் ஆலந்த் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து 5000 பேர் நீக்குவதற்கான வழிமுறைகள் தேர்தல் ஆணைய இணையதளத்திலேயே உள்ளது என்று இந்து நாளிதழில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. இதற்கு தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன? ஒரு பக்கம் நீங்கள் எஸ்.ஐ.ஆர் காகிதத்தில் சேர்த்துக் கொண்டு போகிறீர்கள். மறுபுறம் அவர்கள் கணினியில் அடித்துக்கொண்டே போகிறார்கள்.

7 மாநில இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு

திருவண்ணாமலை பொதுக்கூட்டத்தில் எஸ்ஐஆர் குறித்து முதல்வர், துணை முதல்வர் போன்றவர்கள் பேசுவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் பேசவில்லை. அண்ணாமலை, 80 லட்சம் வாக்காளர்களை நீக்க சொல்லியிருப்பதாக சொல்கிறார். மறுபுறம் ஆர்.எஸ்.பாரதி 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் இருப்பதாக சொல்கிறார். அப்போது பெரிய அளவிலான வாக்காளர்கள் நீக்கப்படுவது அனைவருக்கும் தெரிந்துள்ளது. இதை எப்படி கண்டுபிடித்து சரிசெய்வது? இதற்கான ஒரு வழிகாட்டுதலை முதலமைச்சர் வழங்கியிருக்க வேண்டும்.

நாம் சித்தாந்த ரீதியாக பாஜகவை எதிர்க்கிறோம். ஆனால் அவர்கள் தேர்தல் ரீதியாக தான் வருகிறார்கள். அவ்வளவு பெரிய எதிர்ப்புணர்ச்சி இருக்கக்கூடிய பீகாரில், 200 தொகுதிகளுக்கு மேல் வென்றுவிட்டார்கள். அப்போது என்ன செய்ய முடிந்தது? எனவே திமுக தன்னுடைய கூட்டணி கட்சிகளையும் ஒருங்கிணைத்து, களத்தில் இறங்கி தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். இதற்கு மேலாவது முதலமைச்சர் முரசொலியில் கடிதம் எழுதி, இந்த பிரச்சினையை எதிர்கொள்வது குறித்து தொண்டர்களுக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

திருவண்ணாமலை இளைஞரணி மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தவெகவை மறைமுகமாக சாடியுள்ளார். விஜயை பொருத்தவரை அவருடைய கட்சி மக்கள் மத்தியில் நிலைக்காது. சிந்தனையை தூண்டும் அளவுக்கோ, ஒரு செயற்சக்தி என்று நிரூபிக்கும் அளவுக்கோ தவெக எந்த செயலையும் செய்யவில்லை. அது ஒரு ஜோக்கர் பார்ட்டி என்று நாளுக்கு நாள் மாறிகொண்டிருக்கிறது. ஒரு மாநிலத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் கூட விஜய் ஒரு பிட்டை வைத்துக்கொண்டு பேசுகிறார். விஜய் அரசியலில் ஏதோ சாதிக்கப் போகிறது என்று ஊடகங்களில் பேசுபவர்கள் எல்லாம் பாஜகவின் கையாள்கள் என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

பாஜக சித்தாந்த ரீதியாக தோற்றுவிட்டனர். அவர்களால் சித்தாந்த ரீதியாக தமிழ்நாட்டிற்குள் கால்பதிக்க முடியாது. ஆனால் தொழில்நுட்ப ரீதியாகவும், திருட்டுத்தனத்தின் மூலமாக கால்பதிக்கிறார்கள். திருடன் அங்கவஸ்திரம் எல்லாம் போட்டுக்கொண்டு வரப் போவதில்லை. அவன் கருப்பாடை போட்டுக்கொண்டு இரட்டில் தான் வர போகிறான். ஆனால் இவர்கள் காவி ஆடை அணிந்து வருகிறார்கள். முதலமைச்சர் அமித்ஷாவை சுட்டிக்காட்டி தான் பேசியுள்ளார். ஆனால் அவர்களை எப்படி எதிர்கொள்வது என்பதுதான் வழி. அதை செய்துவிட்டால் போதும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ