spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமண்டபத்தை சேர்ந்த மூன்று மீனவர்கள் சிறைபிடிப்பு... இலங்கை கடற்படை அட்டூழியம்!

மண்டபத்தை சேர்ந்த மூன்று மீனவர்கள் சிறைபிடிப்பு… இலங்கை கடற்படை அட்டூழியம்!

-

- Advertisement -

ராமநாதபுரம் மண்டபத்தை சேர்ந்த மூன்று மீனவர்களை எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

test upload

we-r-hiring

சமீப நாட்களாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 மீனவர்களை எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். மீனவர்கள் கைதை கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார்.

Fisherman
Fisherman

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து ஒரு விசைப்படகில் சென்ற மீனவர்கள் இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத்தாண்டி  மீன்பிடித்ததாக கூறி மூன்று மீனவர்களையும் கைது செய்து, விசைப்படகை பறிமுதல் செய்தனர். மேலும் 3 மீனவர்களையும் இலங்கை அழைத்துச் சென்றுச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ