spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபொங்கல் போனஸ் வழங்க ரூ.183.36 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு உத்தரவு!!

பொங்கல் போனஸ் வழங்க ரூ.183.36 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு உத்தரவு!!

-

- Advertisement -

பொங்கல் போனஸ் வழங்குவதற்காக ரூ.183.86 கோடியை  தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.பொங்கல் போனஸ் வழங்க ரூ.183.36 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு உத்தரவு!!தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு, தமிழக அரசு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.1,000 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3,000 பொங்கல் போனஸாக வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

we-r-hiring

மேலும், தொகுப்பு ஊதியம் மற்றும் காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கும் ரூ.1,000 பொங்கல் போனஸாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் அரசுத் துறைகளில் பணியாற்றும் அனைத்து நிலை ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொங்கல் போனஸ் வழங்குவதற்காக மொத்தமாக ரூ.183.86 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் வளமாக வாழ வாழ்த்துகள் – பிரதமர் புத்தாண்டு வாழ்த்து

MUST READ