spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'நாளையத் தீர்ப்பு' டூ 'ஜனநாயகன்'… 300 அடி பேனர்களை வைத்த விஜய் ரசிகர்கள்…

‘நாளையத் தீர்ப்பு’ டூ ‘ஜனநாயகன்’… 300 அடி பேனர்களை வைத்த விஜய் ரசிகர்கள்…

-

- Advertisement -

நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதை தொடர்ந்து ஈரோட்டில் உள்ள திரையரங்கில், கடந்த 33 வருடங்களாக விஜய் நடித்த அனைத்து படங்களின் காட்சி இடம்பெற்றுள்ள 300 அடி பேனர் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.'நாளையத் தீர்ப்பு' டூ 'ஜனநாயகன்'… 300 அடி பேனர்களை வைத்த விஜய் ரசிகர்கள்…நடிகர் விஜய் கட்சி தொடங்கியதால் ஜனநாயகன் படமே தனது கடைசி படம் என்று அறிவித்துள்ளார். இதனால் நடிகர் விஜயின் ரசிகர்கள் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் ஜனநாயகன் படத்தினை ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், ஈரோட்டில் உள்ள திரையரங்கில் 1992 ஆம் ஆண்டு முதல் விஜய் நடித்த முதல் படமான நாளைய தீர்ப்பு முதல் கடைசி படமான ஜனநாயகம் வரை விஜயின் 69 திரைப்படங்களும் இடம்பெறும் பிரம்மாண்டமான 300 அடி பேனர் வைக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

மேலும், ஈரோடு மாநகரில் நடிகர் விஜயின் மக்கள் இயக்கத்தின் சார்பில்  செய்த நலத் திட்ட பணிகள்,  இலங்கை தமிழர்களுக்காக நடத்திய போராட்டங்கள், ஏழை எளிய மக்களுக்கு ரத்ததானம் வழங்குவது, பொங்கல் பரிசு வழங்குவது என  கடந்த 33 வருடங்களாக  செய்த  பணிகளின் புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பும்  300 அடி பிரம்மாண்டமான பேனரில் இடம் பெற்றுள்ளன. இந்த பிரம்மாண்ட பேனர் விஜய் ரசிகர்களையும் பொதுமக்களையும் கவர்ந்து வருகிறது.

உத்திரபிரதேச மாநில பட்டியலில் 2.88 கோடி வக்காளர்கள் நீக்கம்!!

MUST READ