EPFO சந்தாதாரர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியை யுபிஐ வசதி மூலம் நேரடியாகத் தங்கள் வங்கிக் கணக்கில் பெறும் வசதி வரும் ஏப்ரல் மாதத்திற்குள் அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.


மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டு உள்ளது. அதன்படி, வருங்கால வைப்பு நிதியின் ஒரு குறிப்பிட்ட பகுதி முடக்கப்படும். ஒரு பெரிய பகுதி யுபிஐ மூலம் சந்தாதாரர்களின் வங்கிக் கணக்கைப் பயன்படுத்திப் பணம் பெற்றுக்கொள்ளலாம். தங்கள் வங்கிக் கணக்குகளுக்குப் பணம் பாதுகாப்பாகப் பரிமாற்றம் செய்யப்படுவதை உறுதிசெய்ய, பரிவர்த்தனையை முடிக்க, அவர்கள் தங்களின் இணைக்கப்பட்ட யுபிஐ பின்னைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.

பணம் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதும், உறுப்பினர்கள் அந்தப் பணத்தை மின்னணு முறையில் பணம் செலுத்துவது அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி வங்கி ஏடிஎம்கள் மூலம் பணம் எடுப்பது எனத் தாங்கள் விரும்பியபடி பயன்படுத்திக் கொள்ளலாம். சுமார் 8 கோடி உறுப்பினர்களுக்குப் பயனளிக்கக்கூடிய இந்த அமைப்பைச் சீராகச் செயல்படுத்துவதற்காக, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மென்பொருள் கோளாறுகளைச் சரிசெய்ய முயற்சி செய்து வருகிறது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டம் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் செயல்படுத்தப்பட உள்ளது.


