அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம் மீண்டும் வெளியாகி, வசூலில் புதிய சரித்திரத்தைப் படைத்துள்ளது.
தமிழகத் திரையுலகில் தற்போது ரீ-ரிலீஸ் டிரெண்ட் கலக்கி வருகிறது. புதிய படங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பை விட, ரசிகர்களின் ஃபேவரைட் கிளாசிக் படங்கள் மீண்டும் திரையிடப்படும்போது (Re-release) திரையரங்குகள் திருவிழாக் கோலம் பூணுகின்றன. அந்த வகையில், கடந்த 2011-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம் மீண்டும் வெளியாகி, வசூலில் புதிய சரித்திரத்தைப் படைத்துள்ளது. “நான் ஆடுற ஆட்டம் வேற” என்று அஜித் படத்தில் சொல்வது போலவே, இந்தப் படத்தின் ரீ-ரிலீஸ் வசூலும் இப்போது வேற லெவலில் பேசப்படுகிறது.
மேலும், ரீ-ரிலீஸ் வசூலிலும் தளபதி (விஜய்) தான் கில்லி என கூறி வந்த விஜய் ரசிகா்களுக்கு அதிா்ச்சியான செய்திதான் இது. நேற்று ரீ-ரிலீஸான மங்காத்தா படம் முதல் நாளில் தமிழத்தில் மட்டும் ரூ.3.72 கோடியும், இந்திய அளவில் ரூ.4.1 கோடியும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக விஜயின் கில்லி ரீ-ரிலீஸில் முதல் நாளில் தமிழகத்தில் ரூ.3.50 கோடியும் இந்திய அளவில் ரூ.4 கோடியும் வசூலித்திருந்தது. நீண்ட நாட்களாக இந்த ‘கில்லி’ சாதனையை எந்தப் படத்தாலும் முறியடிக்க முடியாது என்று கருதப்பட்ட நிலையில், தற்போது அஜித்தின் ‘மங்காத்தா’ அந்தச் சாதனையைத் தகர்த்தெறிந்துள்ளது.
