Homeசெய்திகள்கட்டுரைகாங்கிரஸ் கிளம்பட்டும்! பிரேமலதா IN! வேலூர் லாபி OK! தராசு ஷ்யாம் நேர்காணல்!

காங்கிரஸ் கிளம்பட்டும்! பிரேமலதா IN! வேலூர் லாபி OK! தராசு ஷ்யாம் நேர்காணல்!

-

- Advertisement -

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கட்சி வெளியேறினாலும், அதற்கான மாற்றுத் திட்டம் தயாராகவே உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்து  மூத்த பத்திரிகையாளர் தாராசு ஷ்யாம் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது: திமுக – காங்கிரஸ் கூட்டணி உடைபட்டு விடுமோ என்கிற நிலைக்கு சென்றுள்ளது. 39 சீட்டுகள். 2 அமைச்சர்கள் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளதாக தெரிகிறது. திமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்காத போதே அவர்களும் தள்ளிப்போடுவது தெரிகிறது. இது காட்சிப் பிழையாக இருக்க வேண்டும் என்று தான் எல்லோரும் விரும்பினோம். ஆனால் அது அப்படி இருக்கவில்லை என்று தான் தோன்றுகிறது. காங்கிரஸ் கட்சியை வளர்த்து இருந்தால், அவர்களுக்கு திமுக இடங்களை தரும். விஜய் வருகிறபோது அவருக்கு 10 சதவீதம் வாக்குகள் இருக்கும் என கணிக்கப்பட்டது. அவர்களுக்கு அதிமுக 60 இடங்கள் வரை தர முன்வந்தது. அப்படி காங்கிரசுக்கு வாக்கு சதவீதம் இருந்தால் திமுக இயல்பாகவே வழங்கி இருக்கும். அப்படி இல்லாததால் தான் திமுகவுக்கு தயக்கம்.

காங்காரசுக்கு இன்றைக்கு 12 சதவீதம் வாக்குகள் உள்ளதாக உங்கள் கட்சி பிரமுகர் சொல்கிறார். அப்படி 12 சதவீதம் காங்கிரசுக்கு இருந்தால்,  12 சதவீதம் வாக்குகள் உள்ள விஜய் கட்சிக்கு இருக்கும் டிமாண்ட், காங்கிரசுக்கும் இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி டிமாண்ட் இல்லை. உங்களை தவெக கூட்டணியில் சேர்த்துக்கொள்ள போவதாக செய்திகள் வருகின்றன. அவர்களுக்கு என்ன வாக்கு சதவீதம் உள்ளது என்று சொல்கிறார்களே தவிர, உண்மையில் என்ன வாக்கு உள்ளது என்று தெரியாது.

காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள்

தவெகவில் தேர்தல் விருப்பமனு 10 ஆயிரம் பேர் வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். அது என்ன கணக்கு என்றே தெரியவில்லை. சுண்டல் விநியோகம் போல எல்லோரும் வாங்கி சென்று கொண்டிருக்கிறார்கள். தவெகவினருக்கு திரை நட்சத்திரம் என்கிற கவர்ச்சியை தாண்டி எந்த அனுபவமும் கிடையாது. அவர்கள் உங்களுக்கு 60-70 இடங்கள் தருகிறார்கள் என்றால், நீங்கள் சந்தோஷமாக  அங்கே போய் கொள்ளுங்கள் என்று தான் செல்வார்கள். திமுக கூட்டணி பல கட்சி கூட்டணியாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு சீட்டு நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. அதில் கொஞ்சம் முன்ன பின்ன வரலாம். அதையும் மீறி பெரிய டிமாண்ட் வைத்தால், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கும் அதை தர வேண்டும்.

திமுகவை பொறுத்தவரை பழைய கூட்டணி என்பது ஐ.யு.எம்.எல் தான். 1962ல் இருந்து திமுக கூட்டணியில் உள்ளது. கூட்டணி ஆட்சி என்கிற கருத்து, 1967ல் காங்கிரசை வீழ்த்தியபோதே எழுந்து இருக்க வேண்டும். பல கட்சிகளிலும் மூத்த தலைவர்கள் இருந்தனர். ஆனால் யாரும் ஆட்சியில் பங்கு என்று சொல்லவில்லை. ஏனென்றால் அது தேர்தலுக்கு பிறகு முடிவு எடுக்க வேண்டிய விஷயமாகும்.

ஆட்சியில் பங்கு கேட்பதை தாண்டி, உள்ளாட்சி அமைப்புகளில் 3 மேயர் பதவிகளை காங்கிரஸ் கேட்கிறது. இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டதில் அடிமட்டத்திலேயே தொண்டர்கள் வேலை செய்ய மாட்டார்கள். அதனை திமுகவால் ஒப்புக்கொள்ளவே முடியாது. உள்ளாட்சி அமைப்புகளில் 20 சதவீதம் இடங்களை வழங்கிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்துகிறார்கள். அப்படி வழங்கினால் அடிமட்டத்தில் உள்ள தொண்டர்கள் வேலை செய்ய மாட்டார்கள். இந்த விவகாரத்தை இழுத்துக்கொண்டே செல்வதில் எந்த பலனும் இல்லை. எனவே திமுக தென்மண்டல இளைஞர் அணி மாநாட்டில் முதலமைச்சர் எச்சரிக்கை விடுப்பார் என்று நினைக்கிறேன்.

தேமுதிகவுக்கு 20 தொகுதிகள் வரை வெற்றி வாய்ப்புகள் உள்ளன. சில இடங்களில் காங்கிரசை விட அதிக வாக்குகள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களின் வாக்குகள் உள்ளன. காங்கிரஸ் முடிவு எடுக்காததால் தான் திமுகவால் கூட்டணி முடிவு எடுக்க முடியவில்லை. அதேவேளையில் சுதீஷ் குடும்பத்தினரும், திமுகவில் ஒரு அமைச்சர் குடும்பத்தினரும் திருமண பந்தத்தில் நெருங்குகிறார்கள்.

காங்கிரஸ் போய்விட்டால் திமுக காணாமல் போய் விடாது. கூட்டணியில் இருந்து யார் வெளியேறினாலும் என்ன செய்வது என்று பிளான் பி உள்ளது. ஸ்டாலின் பொருத்தவரை நாமாக காங்கிரசை போக சொன்னதாக இருக்கக்கூடாது என்று நினைக்கிறார். கடினமான வார்த்தைகளை அவர் பயன்படுத்துவது கிடையாது. அதுதான் அவருடைய பலமாகும். கூட்டணி ஆட்சி என்கிற கருத்தை திமுக ஏற்றால், உடனடியாக 5 சதவீதம் வாக்குகள் போய்விடும். எனவே மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அந்த முடிவை எடுக்கவிடாமல் தடுக்கும். கட்சியின் கீழ் மட்டத்தினர் இடையே அதிருப்தி ஏற்பட்டு விடும். பேர அரசியல் என்பது சரிதான். ஆனால் ஏதோ ஒரு முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எத்தனை தொகுதிகள் என்று முடிவானால் தான் எந்த எந்த தொகுதிகள் என்று முடிவு செய்ய முடியும்.

எஸ்.ஐ.ஆர் பணிகளில் எந்த வேலையும் பார்க்காத கட்சி காங்கிரஸ். காங்கிரஸ் வெளியேறினால், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு அதிக இடங்களை திமுக தரலாம். திமுகவும் அதிக இடங்களில் போட்டியிடலாம். காங்கிரஸ் கட்சி கூட்டணியை விட்டு போகலாம் என்பது 3 மாதங்களுக்கு முன்பே தெரிந்துவிட்டது. அப்படி வந்தால் என்ன செய்வது என்பதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளன. எதோ ஒரு முடிவை திமுக தலைமை விரைவாக அறிவிக்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ