டெல்லி ஆட்சியாக இருந்து விட்டு போகட்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.


திமுகவை தவிர வேறு யார் ஆட்சி அமைத்தாலும் அது டெல்லி ஆட்சியாக இருக்கும் என முதல்வர் கூறியதற்கு பதிலளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ”டெல்லி ஆட்சியாக இருந்துட்டுப் போகட்டும்” என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளாா்.
திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரியில் போராட்டம் நடத்திய கவுரவ விரிவுரைவாளர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தாா். அப்போது பேசிய திண்டுக்கல் சீனிவாசன், மோடிக்காக அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என யாரிடம் சொல்லிவிடாதீர்கள் எனவும் பிரதமர் மோடிக்காக அதிமுகவுக்கு ஒட்டு போடாமல் இருக்க வேண்டாம் கல்லூரி விரிவுரையாளரிடம் சீனிவாசன் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தாா்.
தேமுதிக ஒன்றிய அமைச்சர் பதவி கேட்கிறது – அதிமுக முன்னாள் அமைச்சர் தகவல்…


