தவெக தலைவா் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளாா்.
தவெக தலைவா் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் 12 பக்க மனுவைத் தாக்கல் செய்துள்ளாா். கணவா் விஜய்யை பிாிந்து வாழ்ந்து வருவதாகக் சங்கீதா கூறியுள்ளாா். இவா்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனா். விஜய்-சங்கீதா திருமணம் 1999 ஆம் ஆண்டு நடைபெற்றது. திருமணம் முடிந்து 27 ஆண்டுகள் ஆன நிலையில் சங்கீதா விவாகரத்துக் கோாியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், திருமண வாழ்க்கை தொடக்க ஆண்டுகளில் இனிமையாகவே சென்றது. 2021 ஆம் ஆண்டு நடிகை ஒருவருடன் விஜய்க்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பது தெரியவந்ததால் அதிா்ச்சியடைந்தேன். இதன் காரணமாக மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானேன். கணவன் மனைவி உறவில் விஜய் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டாா். 2021 செப்டம்பா் முதல் 2022 பிப்ரவாி வரை வழக்கறிஞா் மூலமாக சுமுகமாக பிாிவது குறித்து பேச்சு வாா்த்தை நடத்தினோம். இருதரப்பிலும் வழக்கறிஞா் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் தீா்வு எட்டப்படவில்லை.குழந்தைகளின் படிப்பு மற்றும் அவா்கள் மனதளவில் பாதிக்கக் கூடாது என்பதற்காகவே விவாகரத்து கோருவதை தள்ளி வைத்தேன். ஒரே வீட்டில் நடிகையுடன் தனித்தனியாக வசித்து வருகிறாா். விஜய் வெளிநாடுகளுக்கு செல்லும்போதும் பொது நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளும் போதும் அந்த நடிகையுடனே செல்வாா். திருமண வாழ்விலிருந்து என்னை ஒதுக்கி வைத்துவிட்டு நடிகையுடன் உறவை தொடா்ந்தாா்.

2021-ல் இருந்து விஜய் தன்னை வாா்த்தையால் அவமானப்படுத்தியதாகவும், புறக்கணித்து வருவதாகவும் கூறியுள்ளாா். அம்மனுவில் சங்கீதா பரபரப்பு புகாா் அளித்துள்ளாா்.
விஜயுடன் திரிஷா பற்றி விமர்சனம் செய்த நயினாரின் பேச்சுக்கு குவியும் கண்டனங்கள்!!


