spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமீண்டும் இணையும் ஹ்ருதயம் கூட்டணி... வினீத் சீனிவாசன் இயக்கத்தில் நிவின் பாலி!

மீண்டும் இணையும் ஹ்ருதயம் கூட்டணி… வினீத் சீனிவாசன் இயக்கத்தில் நிவின் பாலி!

-

- Advertisement -

வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்த படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.

மலையாளத்தில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வினீத் சீனிவாசன். இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் மக்கள் மனதை கவர்ந்து வருகிறார். இவர் இயக்கத்தில் வெளியான ஹ்ருதயம் திரைப்படம் மலையாள மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ரசிகர்கள் மனதை வென்றது குறிப்பிடத்தக்கது.

we-r-hiring

நடிகராகவும் கடைசியாக ‘தங்கம்’ படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பார்ப்போரை கண்கலங்க வைத்தார் ‌‌வினீத்.

இந்நிலையில் வினீத் சீனிவாசன் புதிதாக இயக்க இருக்கும் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

இந்த படத்தில் ‘ஹ்ருதயம்’ படத்தின் நாயகன் பிரணவ் மோகன்லால் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் நிவின் பாலியும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

இன்னும் மூன்று நடிகர்களும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ