Homeசெய்திகள்இந்தியாQR கோடு லிங்கில் ஆங்கில பாடல் சர்ச்சை - CBSE அதிரடி விளக்கம்..

QR கோடு லிங்கில் ஆங்கில பாடல் சர்ச்சை – CBSE அதிரடி விளக்கம்..

-

- Advertisement -

QR கோடு லிங்கில் ஆங்கில பாடல் சர்ச்சை - CBSE அதிரடி விளக்கம்..

we-r-hiring

+2 வினாத்தாளில் இடம்பெற்றிருந்த QR கோடை ஸ்கேன் செய்தபோது, பிரபல ஹாலிவுட் பாடல் ஓடிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சிபிஎஸ்இ நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

​மத்திய கல்வி வாரியம் (CBSE) நேற்று (மார்ச் 9) நடத்திய 12-ஆம் வகுப்பு கணிதத் தேர்வில், வினாத்தாளில் QR கோடு (QR Code) ஒன்று இடம்பெற்றிருந்தது. அதில் மாணவர்களுக்கான தேர்வுக்குறிப்புகள், பாடப்புத்தகம் சார்ந்த தகவல்கள் ஏதேனும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த QR கோடை ஸ்கேன் செய்தபோது பிரபல ஆங்கிலப் பாடகரின் இசை வீடியோவிற்கு (Rickroll prank) அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது பெரும் சர்ச்சையையும் சமூக வலைதளங்களில் விவாதத்தையும் ஏற்படுத்தியது. ​இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவியதுடன், வினாத்தாளின் ரகசியத்தன்மை குறித்துப் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக CBSE இன்று விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், எதிர்காலத்தில் இது போன்ற பிழைகள் மீண்டும் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

QR கோடு லிங்கில் ஆங்கில பாடல் சர்ச்சை - CBSE அதிரடி விளக்கம்..

சிபிஎஸ்இ விளக்கம்:

*வினாத்தாள்களின் பாதுகாப்பு மற்றும் ரகசியத்தன்மை எவ்விதத்திலும் சமரசம் செய்யப்படவில்லை. வினாத்தாள்கள் கசியவில்லை என்பது உறுதி செய்யப்படுகிறது.

* சில குறிப்பிட்ட வினாத்தாள் தொகுப்புகளில் மட்டுமே இந்தத் தொழில்நுட்பக் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இது குறித்து வாரியம் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

*”இந்த விவகாரம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இது போன்ற பிரச்னைகள் மீண்டும் நடக்காது என்பதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன,” என்று வாரியம் தெரிவித்துள்ளது.

QR கோடு ஏன் பயன்படுத்தப்படுகிறது?

​வினாத்தாள்கள் போலியாக உருவாக்கப்படுவதைத் தடுக்கவும், ஒருவேளை வினாத்தாள் கசிந்தால் அது எந்த மையத்திலிருந்து கசிந்தது என்பதைக் கண்டறியவும் 2019-ஆம் ஆண்டு முதல் CBSE இந்த QR கோடு முறையைப் பயன்படுத்தி வருகிறது.

​தற்போது ஏற்பட்டுள்ள இந்தச் சிறிய தவறு மாணவர்களின் மதிப்பெண்களையோ அல்லது தேர்வு முடிவுகளையோ எவ்விதத்திலும் பாதிக்காது என்றும் கல்வி வாரிய அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். மாணவர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், எஞ்சியுள்ள தேர்வுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

MUST READ