Homeசெய்திகள்சினிமாவிஜய் எளிமையான, மென்மையான மனிதர்… நடனம் ஆடுவதில் ஜூனியர் என்.டி.ஆர் – தமன்னா புகழாரம்

விஜய் எளிமையான, மென்மையான மனிதர்… நடனம் ஆடுவதில் ஜூனியர் என்.டி.ஆர் – தமன்னா புகழாரம்

-

- Advertisement -

வேல் டெக் பல்கலை கழகத்தில் நடைபெற்ற 2026 லவாசா அறிவியல் மற்றும் கலைத் திருவிழாவில் தமன்னா கலந்துகொண்டு உரையாற்றினாா்.விஜய்  எளிமையான, மென்மையான மனிதர்… நடனம் ஆடுவதில் ஜூனியர் என்.டி.ஆர் – தமன்னா புகழாரம்திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள வேல் டெக் பல்கலை கழகத்தில் 2026 லவாசா அறிவியல் மற்றும் கலைத் திருவிழா 3  நாட்கள் நடைபெறுகிறது.  2வது நாளில்  வேல்டெக் பல்கலைக்கழக தலைவர் மற்றும் வேந்தர் டாக்டர் R.ரங்கராஜன் தலைமையில் 5000த்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வந்து கலந்துகொண்ட நடிகை தமன்னா, “தனக்கு கல்லூரி கால அனுபவங்களை இல்லை எனவும், தற்போது புருஷன் என்னும்  திரைப்படம் படப்பிடிப்பு நடைபெறுவதாகவும் அதை பாதியிலேயே விட்டுவிட்டு நிகழ்ச்சிக்கு வந்துள்ளதாகவும் மீண்டும் நாளை மும்பைக்கு செல்வேன் என பேச தொடங்கிய நடிகை தமன்னா. ஆனால் நீங்கள் இங்கே கல்லூரியில் உள்ளீர்கள். ஒவ்வொரு தருணங்களையும் சந்தோஷமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கல்லூரி நாட்கள் போனால் மீண்டும் வராது எனவும், உங்களுடைய அனைவரின் அன்பாலும் என்னுடைய சினிமா வாழ்வில் 21 வருடங்களாக உள்ளதாகவும். தான் மிகவும் இளம் வயதில் சினிமா துறைக்கு வந்ததாகவும், தற்போது நீங்கள் இந்த காலத்தில் உள்ளீர்கள்.

we-r-hiring

நீங்கள் நிஜமாகவே எதை விரும்புகிறீர்களோ எந்த பாடம் எந்த பொருள் வேண்டுமோ, அதை நன்றாக எடுத்துப் படிக்க வேண்டும் என அறிவுரை வழங்கிய அவர் என்னுடைய பள்ளிப் பருவத்திலேயே சினிமாவில் நடிக்க வேண்டும் என யோசனை வரும்போது அதற்காக மிகவும் கடினமாக உழைத்ததாகவும், விளையாட்டாகவும் இருந்ததாகவும் அவ்வளவு எளிதில் இந்த சினிமாத்துறை தனக்கு கிடைத்துவிடவில்லை வேதனை தெரிவித்தாா்.விஜய்  எளிமையான, மென்மையான மனிதர்… நடனம் ஆடுவதில் ஜூனியர் என்.டி.ஆர் – தமன்னா புகழாரம்ஆனால் தற்போது நீங்கள் ஒரு நல்ல இடத்தில் இருக்கிறீர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் எதைப் பற்றியும் கவலைப்படக்கூடாது. நீங்கள் மீண்டும் மீண்டும் காதல் செய்ய வேண்டும். உங்கள் காதல் உங்கள் வேலையில் காண்பிக்க வேண்டும். படிப்பில் காண்பிக்க வேண்டும் என பேசி சுவாரஸ்யப்படுத்தினாா்.

எங்கள் கல்லூரியில் வந்து சேர வேண்டும் என மாணவர் மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். ஏரோநாட்டிக்கல் துறையில் விருப்பம் உள்ளதாகவும், உங்கள் அனைவரின் பேட்ச் மெட்டாக நான் வருகிறேன் என பேசி மாணவர்களை குஷிப்படுத்தினார். தான் முதன் முதலில் நடித்த கல்லூரி திரைப்படம் மிகவும் முக்கியமான என்னுடைய நாட்கள் எனவும் அந்த கதை கல்லூரியின் அடிப்படை கதை என நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

தளபதி விஜய் பற்றி பேசும் பொழுது மிகவும் எளிமையான பொதுவான மிகவும் மென்மையான மனிதர் என கூறி அவர் நடனம் ஆடுவதில் விஜய் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் தான் என்றார்.விஜய்  எளிமையான, மென்மையான மனிதர்… நடனம் ஆடுவதில் ஜூனியர் என்.டி.ஆர் – தமன்னா புகழாரம்தல அஜித் பற்றி கூறும் போது வீரம் திரைப்படத்தில் இவள் தானா பாடல் ஒளிப்பதிவு செய்யும்  படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அஜித்குமார் தனக்கு கேரோவனில் சுடச்சுட இட்லி சமைத்துக் கொடுப்பார் எனவும். அவர் மிகவும் நல்ல மனிதர் மென்மையானவர் நல்ல குடும்பஸ்தன் என நடிகர் அஜித்தை புகழ்ந்து பேசினார்.

பிரபல ஹிந்தி பாடலுக்கு மாணவ மாணவியருடன் உற்சாகமாக நடனமாடி சந்தோஷத்தை வெளிப்படுத்தினாா். அவர்களுடைய குழுவாக புகைப்படம் வீடியோ எடுத்துக்கொண்டார்.

“என் பேங்க் பேலன்ஸ் கூட எனக்குத் தெரியாது!” – மனைவி ஆர்த்தியை மேடையில் புகழ்ந்து தள்ளிய சிவகார்த்திகேயன்

MUST READ