Homeசெய்திகள்சினிமா"ஏன் என்னைக் கூப்பிடல?" - குட்டி ரசிகையின் செல்லக் கோபத்தை போக்கிய விஜய் தேவரகொண்டா -...

“ஏன் என்னைக் கூப்பிடல?” – குட்டி ரசிகையின் செல்லக் கோபத்தை போக்கிய விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா தம்பதி!

-

- Advertisement -

சினிமா திரையில் மட்டுமல்லாது நிஜ வாழ்விலும் ரசிகர்களின் மனதை வென்று வரும் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா தம்பதி, ஒரு சிறிய ரசிகைக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளனர்."ஏன் என்னைக் கூப்பிடல?" - குட்டி ரசிகையின் செல்லக் கோபத்தை போக்கிய விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா தம்பதி!வைரலான இன்ஸ்டாகிராம் வீடியோ

​சமீபத்தில் நடைபெற்ற இவர்களது திருமணத்தின் போது, ‘லக்கி’ (urs lucky thalli) என்ற சிறுமி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். அதில், “விஜய் மாமா, ராஷ்மிகா அக்கா… நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க, ஆனா என்னை ஏன் கூப்பிடல? எனக்கும் லட்டு வேணும், நானும் வருவேன்” என்று மிகவும் மழலை மொழியில் செல்லமாக கோபித்துக் கொண்டு பேசியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி விஜய் தேவரகொண்டாவின் கவனத்திற்குச் சென்றது.

we-r-hiring

வீட்டுக்கே அழைத்தரவுடிஸ்டார்

​அந்த வீடியோவைப் பார்த்த விஜய் தேவரகொண்டா, உடனே அந்தச் சிறுமிக்கு பதிலளித்தார். “புஜ்ஜித்தல்லி.. உன்னை வீட்டுக்கு மதிய உணவிற்கு அழைக்கிறேன். உனக்கு பிடித்த உணவுகள் மற்றும் இனிப்புகளைச் சொல், நாம் அனைவரும் சேர்ந்து சாப்பிடலாம்” என்று உறுதியளித்திருந்தார்.

சொன்னதைச் செய்த தம்பதி

​தான் கொடுத்த வாக்குறுதியின்படி, அந்தச் சிறுமியையும் அவரது குடும்பத்தினரையும் ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்திற்கு விஜய் தேவரகொண்டா அழைத்திருந்தார்.​ சிறுமி வீட்டிற்கு வந்தவுடன் விஜய் தேவரகொண்டா அவரைத் தூக்கிக் கொஞ்சி வரவேற்றார்.

​சிறுமிக்கு பிடித்தமான உணவுகள் மற்றும் இனிப்புகள் (லட்டு உள்ளிட்டவை) பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டிருந்தன. ராஷ்மிகா மந்தனா அந்தச் சிறுமிக்கு அன்புடன் உணவைப் பரிமாறி, லட்டுகளை ஊட்டி விட்டு முத்தமிட்டு மகிழ்ந்தார்.

மகிழ்ச்சி: “நாமும் நண்பர்கள் தானே?” என்று அந்தச் சிறுமி கேட்டபோது, இருவரும் புன்னகையுடன் அதனை ஆமோதித்தனர்.

நெகிழ்ச்சியில் ரசிகர்கள்

​”ரீல் முதல் ரியல் வரை இது ஒரு மறக்க முடியாத தருணம்” என்று அந்தச் சிறுமியின் குடும்பத்தினர் பதிவிட்டுள்ளனர். ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஒரு குழந்தையிடம் கொடுத்த வாக்கை நிறைவேற்றிய இந்த நட்சத்திர தம்பதியை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்ட விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா?

MUST READ