மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டத்திற்கு வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பேபியை மரியாதை நிமித்தமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்தாா்.
தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழு மற்றும் மாநிலக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பேபி கலந்து கொண்டுள்ளார். பேபியும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் நீண்டகால நட்பு கொண்டவர் என்பதால் பேபியை மரியாதை நிமித்தமாக சந்திக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வைகோ சென்றுள்ளாா்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பேபிக்கு பொன்னாடை போர்த்தி வைகோ மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பேபி மாநிலங்களவையில் எனக்கு சக உறுப்பினர் மட்டுமல்ல என் மீது எல்லையற்ற அன்பு கொண்டவர். அண்மையில் திருவனந்தபுரம் சென்று நாடாளுமன்ற இரு அவைகளில் நடத்திய உரையை தொகுத்து அணிந்துரை வழங்குவதற்காக கேரளா முதல்வரை சந்திக்க சென்றபோது விமான நிலையத்திற்கே தொழிற்சங்கங்க தலைவர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் அனுப்பி வைத்து பேபி வரவேற்றார்.

எனக்கும் பேபிக்கும் பழைய பாடல்கள் கேட்பது பழக்கம். எங்களது நட்பு இப்படிப்பட்ட நட்பு. பேபி சென்னை வந்துள்ளார் என டிவியில் பார்த்தேன் அதனால் உடனே புறப்பட்டு வந்தேன். அவரை சந்தித்து பொன்னாடை போர்த்தி புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.
நான் படுத்திருக்கும் அறையில் தொள்ளாயிரம் பழைய பாடல்கள் வரை இருக்கும். நீங்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் என்னிடம் இருந்து எந்த பதிலும் வராது, நட்பு தான் நான் சேர்த்த சொத்து, அவர் இங்கு வந்திருப்பதால் சந்திக்க வந்தேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வளாகத்திற்குள் அரசியல் கருத்து எதுவும் சொல்ல மாட்டேன் என தெரிவித்தார்.
அரசுப்பேருந்து சரக்குவாகனத்தில் மோதி எட்டு பேர் உயிரிழப்பு… இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் இரங்கல்…
