Homeசெய்திகள்தமிழ்நாடுதொழிற்துறையினருக்கு நிம்மதி: வணிக சிலிண்டர் விநியோகம் 70% ஆக உயர்வு - ஒன்றிய அரசு அதிரடி!

தொழிற்துறையினருக்கு நிம்மதி: வணிக சிலிண்டர் விநியோகம் 70% ஆக உயர்வு – ஒன்றிய அரசு அதிரடி!

-

- Advertisement -

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் மற்றும் எரிசக்தி தட்டுப்பாடு காரணமாகக் குறைக்கப்பட்டிருந்த வணிகப் பயன்பாட்டிற்கான எல்.பி.ஜி (LPG) சிலிண்டர்களின் விநியோகத்தை 70 சதவீதமாக உயர்த்தி ஒன்றிய அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தொழிற்துறையினருக்கு நிம்மதி: வணிக சிலிண்டர் விநியோகம் 70% ஆக உயர்வு - ஒன்றிய அரசு அதிரடி!

ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 50% ஒதுக்கீட்டுடன், தற்போது கூடுதலாக 20% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த விநியோகம் 70%-ஆக உயர்கிறது.

we-r-hiring

இரும்பு மற்றும் எஃகு (Steel), ஆட்டோமொபைல், ஜவுளி, சாயத் தொழில், ரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் போன்ற அதிக தொழிலாளர்களைக் கொண்ட துறைகளுக்கு இந்த விநியோகத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த கூடுதல் ஒதுக்கீட்டைப் பெற, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எண்ணெய் நிறுவனங்களில் (OMCs) பதிவு செய்திருக்க வேண்டும். மேலும், குழாய் வழி எரிவாயு (PNG) இணைப்புக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் நிலவும் எரிசக்தி நெருக்கடி காரணமாக, கடந்த சில வாரங்களாக வணிக சிலிண்டர்களின் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இதனால் உணவகங்கள், சிறு தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. இந்த சூழலைச் சரிசெய்யவும், உற்பத்தித் துறையை ஊக்குவிக்கவும் பெட்ரோலிய அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் நீரஜ் மிட்டல் அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கும் இந்த புதிய உத்தரவை அனுப்பியுள்ளார்.

​நிபுணர்கள் கருத்து:
​”அரசின் இந்த முடிவு சிறு மற்றும் குறு தொழில்களுக்குப் பெரும் ஊக்கத்தை அளிக்கும். குறிப்பாக, இயற்கை எரிவாயுவுக்கு (Natural Gas) மாற்ற முடியாத பிரத்யேக வெப்பமூட்டும் முறைகளைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு (Process Industries) இந்த 70% ஒதுக்கீடு ஒரு வரப்பிரசாதமாகும்,” எனப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்களுக்கான வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகம் எவ்வித தடையுமின்றி சீராகத் தொடரும் என்றும், பதுக்கலைத் தவிர்க்கக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசு உறுதி அளித்துள்ளது.

தமிழகத்தில் எரிபொருள் தட்டுப்பாடு…வதந்திகளை நம்ப வேண்டாம் – தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்கள் சங்கம் உறுதி

MUST READ