spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் வாங்க இது சரியான நேரமா? இன்றைய நிலவரம்

தங்கம் வாங்க இது சரியான நேரமா? இன்றைய நிலவரம்

-

- Advertisement -

தங்கம் வாங்க இது சரியான நேரமா? இன்றைய நிலவரம்

வாரத்தின் முதல் நாளான இன்று சென்னையில் வெள்ளி விலை சற்று குறைந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் தங்கத்தின் தேவை 4,741 டன்களாக அதிகரித்தது கடந்த ஆண்டுதான். விழாக்காலமான அக்டோபர்- டிசம்பர் காலாண்டில் தங்க விற்பனை அதிகரித்ததும் ஆர்பிஐ கொள்முதலில் இறங்கியதுமே தங்கத்தின் தேவை அதிகரித்ததற்கு காரணம் என தெரிகிறது.

we-r-hiring

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் எவ்வித மாற்றமும் இன்றி ரூ.45,040- க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 5,630-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.20 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,200 எனவும் விற்பனையாகிறது.

MUST READ