Homeசெய்திகள்அரசியல்திமுகவுடன் மதிமுக இணைப்பா?: வைகோ பதில்

திமுகவுடன் மதிமுக இணைப்பா?: வைகோ பதில்

-

- Advertisement -

திமுகவுடன் மதிமுக இணைப்பா?: வைகோ பதில்

99.9 சதவீதம் பேர் மதிமுகவை திமுகவுடன் இணைக்கக் கூடாது என்ற முடிவில் உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோ

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “திமுகவுடன் மதிமுகவை இணைக்கும் நோக்கமில்லை. அவைத்தலைவர் துரைசாமியின் கோரிக்கையை நிராகரிக்கிறோம். மதிமுகவினர் வற்புறுத்தியதால்தான் என் மகன் துரைவைகோ அரசியலுக்கு வந்தார். ஜனநாயக முறைப்படி கட்சியில் அமைப்பு தேர்தல் நடந்துவருகிறது. மதிமுக முக்கிய காலக்கட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது.

we-r-hiring

99.9 சதவீதம் பேர் மதிமுகவை திமுகவுடன் இணைக்கக் கூடாது என்ற முடிவில் உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள தொண்டர்களும் மதிமுகவை திமுகவுடன் இணைக்க கூடாது என்றே கூறுகின்றனர். 30 ஆண்டுகளாக மதிமுக போராடி பயணித்து வந்துள்ளது. எத்தனையோ கஷ்டங்களை, கடந்து வந்துள்ளோம். இதையும் கடந்து செல்வோம். சில வற்றை அலட்சியப்படுத்துகிறோம். சிலவற்றை நிராகிரிக்கிறோம். துரைசாமிக்கு நான் முக்கியத்துவம் அளித்து பேச விரும்பவில்லை. 2 ஆண்டுகளாக வராதவர் தற்போது அறிக்கை தருகிறார் என்றால் அது நல்ல நோக்கத்திலா இருக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.

MUST READ