Homeசெய்திகள்அரசியல்நீளும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை – 10 தொகுதிகள் வேண்டும் என விசிக கோரிக்கை…

நீளும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை – 10 தொகுதிகள் வேண்டும் என விசிக கோரிக்கை…

-

- Advertisement -

விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் போட்டியிட 10 சட்டமன்ற தொகுதிகள் வேண்டுமென  திமுகவிடம் கோரிக்ககை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நீளும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை – 10 தொகுதிகள் வேண்டும் என விசிக கோரிக்கை…தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், முதற்கட்ட பேச்சு வார்த்தையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுவதற்கு 15 சட்டமன்ற தொகுதிகள் வேண்டுமென விசிக சார்பில் கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், திமுக தலைமை தமிழகத்தில் போட்டியிடுவதற்கு ஏழு தொகுதிகள் வரை வரை வழங்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், புதுச்சேரியில் விசிகவிற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படுவது உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, தற்போது தமிழகத்தில்  மட்டும் குறைந்தது 10 இடங்கள் வழங்க வேண்டும் என விசிக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆறு இடங்களில் போட்டியிட்ட விசிக, தற்போது கூடுதலாக 4 இடங்கள் கேட்டு வருகிறது.

we-r-hiring

அதே நேரத்தில், கடந்த முறை வழங்கப்பட்ட ஆறு சீட்டுகளில் இருந்து கூடுதலாக ஒரு சீட்டு என ஏழு இடங்களில் வழங்கும் முனைப்பில் திமுக இருப்பதாகவும் கூறப்படுகிறது. தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக கூட்டணி பேச்சு வார்த்தை குழுவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை விசிக்க முடித்துள்ள நிலையில் முதலமைச்சருடன் திருமாவளவன் நேரடியாக அவ்வப்போது பேசி வருகிறார்.

இதனிடையே, தேமுதிகவிற்கு கூடுதல் இடங்கள் கொடுப்பது குறித்து பிரச்சனை இல்லை ஆனால், விசிகவிற்கு 10 இடங்கள் வேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும், குறைவான எண்ணிக்கையில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு கொடுத்தால் விசிக தொண்டர்கள் சோர்ந்து விடுவார்கள் என கூட்டணி பேச்சுவார்த்தையின் போது விசிக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக கூட்டணியை வீழ்த்துவதே எங்களது முதன்மை நோக்கம்: இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன் அதிரடி!

MUST READ