Homeசெய்திகள்அரசியல்காசி மேட்டில் மீன் விற்பனை செய்த நடிகை… எம்.ஜி.ஆர் பாணியில் பிரச்சாரம்!!

காசி மேட்டில் மீன் விற்பனை செய்த நடிகை… எம்.ஜி.ஆர் பாணியில் பிரச்சாரம்!!

-

- Advertisement -

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதிமுக செய்தி தொடர்பாளர் நடிகை கௌதமி காசிமேட்டில் மீனவப் பெண்களிடம் அதிமுக தேர்தல் அறிக்கையை  துண்டு பிரசுரங்களாக வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.காசி மேட்டில் மீன் விற்பனை செய்த நடிகை… எம்.ஜி.ஆர் பாணியில் பிரச்சாரம்!!தேர்தல் களம் சூடு பிடித்துள்ள  நிலையில் வேட்பாளர்கள் யாருக்கு தொகுதி ஒதுக்கப்படும் என்று கலக்கத்தில் உள்ள நிலையில் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காசிமேடு பகுதியில் மீன் பிடி துறைமுகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் நடிகை கௌதமி மீனவ மக்களை சந்தித்து உரையாடினார்.

திடீரென்று காசிமேடு மீன் சந்தைக்கு சென்ற நடிகை கௌதமி மீனவப் பெண்களிடம் அதிமுக தேர்தல் அறிக்கையை எடுத்துரைத்து துண்டு பிரசுரங்களாக வழங்கினார்.

we-r-hiring

பின்னர் காசிமேட்டில் விற்பனை செய்யப்பட்டிருக்கும் பெரிய பெரிய மீன்களை கையில் தூக்கி ரசித்த கௌதமி,  மீனவ பெண்ணிடம் அமர்ந்து மீன் வியாபாரம் செய்தும் பிரசாரத்தில் ஈடுபட்டார். எம்.ஜி.ஆர் பாணியில் மீனவர் பெண்களை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறி அதிமுக தேர்தல் அறிக்கையை எடுத்துரைத்தார்.

”மாற்றத்திற்கான வழி” – 462 பக்கங்கள் கொண்ட நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு …

MUST READ