Homeசெய்திகள்உலகம்34 வது நாளாக தொடரும் போர் - ஆசிய பங்கு சந்தையில் பெரும் சரிவு…

34 வது நாளாக தொடரும் போர் – ஆசிய பங்கு சந்தையில் பெரும் சரிவு…

-

- Advertisement -

மத்திய கிழக்கு நாடுகளில் தொடரும் போர் பதற்றம் காரணமாக ஆசிய பங்கு சந்தை பெரும் சரிவை கண்டுள்ளது. இதன் காரணமாக உலகளவில் அதியாவசிய பொருட்களின் விலை மற்றம் பெட்ரோல் விலையும் தொடர்ந்து உயரந்து வருகிறது.

34 வது நாளாக தொடரும் போர் - ஆசிய பங்கு சந்தையில் பெரும் சரிவு…

we-r-hiring

ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கா போர் 34 வது நாளாக தொடர்ந்து நீடித்து வருவதால் உலகளவில் பெட்ரோல் விலையும், அதனை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது.

ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் கடல் வழி பாதையை மூடியதால் உலகளவில் எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.  ஆசிய பங்கு சந்தையும் சரிவடைந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை 2% உயர்ந்து $104.53 ஆக அதிகரித்துள்ளது. டாலர் உயர்வினால் ஆசிய பங்கு சந்தை, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங் பங்கு சந்தைகளும் பெரும் பாதிப்படைந்துள்ளது.

இரான் மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதாக இரான் அறிவித்துள்ளது. இதனால் எண்ணெய் விலை ஒரு பேரால் கச்சா எண்ணெய் $150 அல்லது $200 வரை உயரலாம் என கணிக்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானில் அமெரிக்கப் படைகள் தங்கள் முக்கிய இலக்குகளை நெருங்கிவிட்டதாகவும், அடுத்த இரண்டு மூன்று வாரங்களில் ஈரானை கடுமையாக தாக்கப்போவதாகவும் கூறியுள்ளார். “அவர்களை கற்காலத்திற்கு திருப்பி அனுப்புவோம்” என்றும் அவர் பேசி வருகிறார்.

ட்ரம்ப், தனது  உரையில், ஈரானின் கடற்படை மற்றும் விமானப்படை அழிக்கப்பட்டுவிட்டதாகவும், அந்நாட்டின் ஏவுகணை மற்றும் அணுசக்தி திறன்கள் பெருமளவில் குறைக்கப்பட்டுவிட்டதாகவும் கூறினார். ஈரான் அணுசக்தி ஆயுதங்களை உருவாக்குவதை தடுப்பதே அமெரிக்காவின் முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இரான் அரசு, ட்ரம்பின் இந்த பேச்சுக்களை “பொய் என்றும் அடிப்படை ஆதாரமற்றது” என்றும் கூறி மறுத்துள்ளது. ஈரானின் இராணுவ திறன்கள் இன்னும் அப்படியே உள்ளதாகவும், அவர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள தயாராக இருப்பதாகவும் இரான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ட்ரம்பின் இதுபோன்ற அறிவிப்புகள் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலை எப்படி முடிவுக்கு வரும் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

ஹார்முஸ் நீர்வழியை மீண்டும் திறப்பதற்கான வழிகளைத் திட்டமிடுவதற்காக 30க்கும் மேற்பட்ட நாடுகள் ஏப்ரல்-10 அன்று வியாழக்கிழமை கூடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர், வெளியுறவு செயலாளர் யவெட் கூப்பர் தலைமையிலான இந்த கூட்டம், கடலுக்குள் சிக்கித் தவிக்கும் கப்பல்கள், மாலுமிகளின் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்மோஸ் கடல் வழி பாதையை மீண்டும் தொடங்குவதற்கு” அரசியல் நடவடிக்கைகள் குறித்து பேசப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் முக்கிய வெடிமருந்துக் கிடங்கின் மீது தாக்குதல்!!

MUST READ