திமுக ஆட்சியில் அண்ணாநகர் தொகுதியில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக திமுக வேட்பாளர் சிற்றரசு தெரிவித்துள்ளார்.
அண்ணா நகர் தொகுதியின் திமுக வேட்பாளர் சிற்றரசு புதிதாக அமைக்கப்பட்டுள்ள இணையத் தொழிலாளர் கூடத்தில் (Gig Worker Lounge) தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்து, “இந்தியாவில் யாரும் யோசிக்காத திட்டத்தை அரசு உருவாக்கி உள்ளதாக இணைய தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இதுபோல பல்வேறு பகுதிகளில் இணைய தொழிலாளர் கூடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர். இந்த அமைப்பு என்பது இன்னும் சற்று கூடுதலான இட வசதி, கூடுதல் மொபைல் சார்ஜிங் செய்வதற்கான வசதி அமைத்த தர வேண்டும்.

எதிர்க்கட்சி வேட்பாளர் கோகுல இந்திரா தனது பொறுப்பு காலத்தில் இந்த தொகுதிக்கு என்ன செய்துள்ளார் என்ற விபரத்தை தர சொல்லுங்கள், அமைச்சராக இருந்தும் தனது தொகுதிக்கு எந்த ஒரு திட்டத்தையும் அவர் செயல்படுத்தவில்லை என்றார்.
மேலும், 2016 – 21 காலகட்டத்தில் அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன் முடிந்தவரை தனது தொகுதி மேம்பாட்டு மற்றும் சொந்த நிதியிலிருந்தும் இந்த தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். அதனால் தான் அவர் 2021லில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அண்ணா நகர் தொகுதிக்குட்பட்ட பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே அரும்பாக்கம், என்.எஸ்.கே.நகர் போன்றவை தாழ்வான பகுதிகள், அவற்றில் எந்த ஒரு மழை நீர் வடிகால் பணியையும் கோகுல இந்திரா அமைச்சராக இருந்த பொழுது மேற்கொள்ளவில்லை. அதனால் தான் அந்தப் பகுதிகளில் மழை பெய்யும் பொழுதெல்லாம் கடந்த காலங்களில் மழைநீர் தேங்கியது. ஆனால் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் அண்ணாநகர் தொகுதிக்குள் மட்டும் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பல இடங்களில் பணிகளுக்கு செல்லும் போது மொபைல் சார்ஜ் செய்யவும், சற்று நேரம் ஓய்வெடுக்கவும் முதலமைச்சரின் திட்டம் தங்களுக்கு பெறும் பயனுள்ளதாக இருப்பதாக ஆன்லைன் தொழிலாளர்கள் தெரிவித்தனர். இது போன்று பெண் இணைய தொழிலாளர்களுக்கு தனியாக பெண் இணைய தொழிலாளர்கள் கூட்டம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் அதுவும் ஆட்சிப் பொறுப்பேற்றுடன் முதலமைச்சர் துணை அமைச்சருடன் ஆலோசித்து நடைமுறைப்படுத்தப்படும் என்று பேட்டியளித்தாா்.
தமிழ்நாட்டின் வாசல்வரை வந்துவிட்டது பேராபத்து – முதல்வர் எச்சரிக்கை
